ஜன நாயகன் படக்குழுவின் செல்லம் மமிதா பைஜூ – இயக்குநர் எச் வினோத்
Director H Vinoth: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் எச். வினோத். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ஜன நாயகன். இந்தப் படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மமிதா பைஜூ மற்றும் தளபதி விஜய்
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமா முழுவதும் முன்னணி நடிகையாக அலம் வருகிறார். இவர் மலையாள சினிமாவிலி ரண்டாம் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து அவரது நடிப்பின் காரணமாக நாயகியாக அறிமுகம் ஆனார். இவர் நாயகியாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இவரது நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான பிரேமலு படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இவருக்கு தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது இந்தப் படம். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடிகை மமிதா பைஜுவிற்கு வாய்ப்புகள் குவிந்தது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் மட்டும் அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக அறிமுகம் ஆன படம் டியூட். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் இயக்குநர் எச் வினோத் நடிகை மமிதா பைஜூ குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஜன நாயகன் படக்குழுவின் செல்லம் மமிதா பைஜூ:
எங்கள் படக்குழுவில் மமிதா பைஜு அனைவருக்கும் மிகவும் பிடித்தமானவர். பார்ப்பதற்கு ஒரு இளம் பெண்ணைப் போல் இருந்தாலும், அவர் ஒரு புத்திசாலியான நடிகை. சினிமாவில் என்னை உண்மையிலேயே கவர்ந்து வியக்க வைத்த ஒருவர் இருக்கிறார் என்றால், அது மமிதாதான். இந்தப் படத்தில் அவர் சண்டைக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார், அழகாகவும் நடித்திருக்கிறார். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, டப்பிங்கில் அவர் காட்டிய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் என்னை முழுமையாக வியப்பில் ஆழ்த்தியது என்று இயக்குநர் எச். வினோத் தெரிவித்து இருந்தார்.
Also Read… டாக்ஸிக் படத்தில் நடிகை நயன்தாராவின் கதாப்பாதிரம் இதுதான் – படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
HVinoth Recent Interview 👀
“In our unit, #MamithaBaiju is everyone’s darling. Even though she looks very much like a young girl, she is a sensible actress. If there’s one person in cinema who truly impressed and amazed me, it’s Mamitha. In this film, she has done action scenes… pic.twitter.com/OF8nMH1gPw
— Movie Tamil (@_MovieTamil) December 31, 2025
Also Read… தனுஷின் அந்த செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது – இயக்குநர் மாரி செல்வராஜ்