அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை – இளையராஜா
Music Director Ilaiyaraaja: தமிழ் சினிமாவில் இசையமைத்து உலக அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில் அதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் சமீபத்தில் சிம்பொனி இசையமைத்து உலக ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்ததற்காகவும் இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

கமல் ஹாசன், இளையராஜா, முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் அன்னக்கிளி என்ற படத்தில் இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraaja). தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் சுமார் 1600-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவரின் இசையை தற்போது உள்ள 2கே கிட்ஸ்கள் வரை வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் 70, 80, 90களில் இசையமைத்தப் பாடல்களும் தற்போது படங்களில் பயன்படுத்தப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்பொனி இசையை உருவாக்கி லண்டனில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியில் இவர் இசைத்தது தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தினார் என்று ரசிகர்கள் கொண்டாடித் தீத்தனர்.
இந்த இசை நிகழ்ச்சி முடிந்தபிறகு லண்டனில் இருந்து மீண்டும் சென்னைக்கு வந்த இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இளையராஜாவிற்கு விழா எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று 13-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் முன்னிலையில் நடந்தது. இந்த விழாவில் பிரபலங்கள் பேசியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதலவர் மற்றும் கமல் – ரஜினிக்கு நன்றி தெரிவித்த இளையராஜா:
இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சியில் சரியாக நன்றி தெரிவிக்கமுடியவில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கும், உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் எக்ஸ் தள பதிவு:
நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு… pic.twitter.com/uYu2tM2dnX
— Ilaiyaraaja (@ilaiyaraaja) September 14, 2025
Also Read… கவர்ச்சி உடை.. அந்த இயக்குநரின் படம்.. பல ஆண்டுகள் கழித்து பகீர் கிளப்பிய நடிகை மோகினி!