மீண்டும் இணைந்த ஆம்பள பட கூட்டணி.. படக்குழு வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Sundar C And Vishals New Film: இயக்குநராகவும், நடிகராகவும் சினிமாவில் பிரபலமான ஒருவர் சுந்தர் சி. இவரின் இயக்கத்தில் தற்போது விஷால் புது படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் தொடங்கிய நிலையில், தற்போது படக்குழு ரசிகர்களுக்கு மகிழ்ச்சையை கொடுக்கும் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மீண்டும் இணைந்த ஆம்பள பட கூட்டணி.. படக்குழு வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

விஷால், ஆதி மற்றும் சுந்தர் சி

Published: 

29 Dec 2025 16:46 PM

 IST

தமிழ் சினிமாவில் நகைச்சுவையுடன் கலந்த ஹாரர் திரைப்படம் என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருபவர் இயக்குநர் சுந்தர் சி (Sundar C). இவரின் இயக்கத்தில் ஹாரர் படங்கள் வெளியாகி பிரம்மாண்ட ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த விதத்தில் இவர் வெறும் ஹாரர் திரைப்படங்களை மட்டும் இயக்காமல், ஆக்ஷன், மூளும் நகைச்சுவை மற்றும் பல்வேறு கதைக்களம் கொண்ட படங்களையும் இயக்கி வெற்றி கண்டுள்ளார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் கேங்கர்ஸ் (Gangers). இந்த படத்தில் சுந்தர் சி, வடிவேலு (Vadivelu) மற்றும் கேத்ரின் தெரசா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. தற்போது மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2) படத்தை இயக்குவதில் சுந்தர் சி பிசியாக இருந்துவருகிறார். இப்படத்தை அடுத்ததாக ரஜினிகாந்துடன் (Rajinikanth) படம் இணைவதாக இருந்த நிலையில், அப்படம் கைவிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக நடிகர் விஷாலை (Vishal) வைத்து புது படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படம் தொடர்பாக படக்குழு அப்டேட் பதிவை வெளியிட்டுள்ளது. அந்த என்னவென்றால் விஷால் நடித்த ஆம்பள பட பாடல் ரெக்கார்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதில் விஷால், சுந்தர் சி மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி (HipHop Aadhi) உள்ளிட்ட பிரபலங்கள் இருக்கின்றனர். அந்த வகையில் விஷால் மற்றும் சுந்தர் சி இணையும் புது படத்திற்கு ஆதி தான் இசையமைப்பாளர் என படக்குழு உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்

சுந்தர் சியின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இயக்குநர் சுந்தர் சி தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, ரெஜினா, அபிநயா, மீனா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இப்படமும் மூக்குத்து அம்மன் 1 படத்திலிருந்து வேறு கதையை மையமாக கொண்ட படமாக தயாராகிவருகிறது.

இதையும் படிங்க: அதுக்கு ஒரு தைரியம் வேண்டும் என்று சுதா கொங்கரா கூறினார் – ரவி மோகன் பேச்சு

இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு