தென்னிந்திய சினிமாவில் நாளை ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

Theatre Release Movies: கோலிவுட் சினிமாவில் கடந்த வாரம் கூலி படம் திரையரங்குகளில் வெளியானதால் தென்னிந்தியா சினிமா முழுவதும் மற்றப் புதுப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 2 புதுப் படங்கள் வெளியாகின்றது.

தென்னிந்திய சினிமாவில் நாளை ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

படங்கள்

Published: 

21 Aug 2025 19:35 PM

இந்திரா: இயக்குநர் சபரிஸ் நந்தா எழுதி இயக்கி உள்ள படம் இந்திரா. இந்தப் படத்தில் நடிகர் வசந்த் ரவி (Vasanth Ravi) நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் மெஹ்ரின் பிரசன்டா, சுனில், அனிகா சுரேந்திரன், கல்யாண் மாஸ்டர் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பு நிறுவனங்களான ஜேஎஸ்எம் திரைப்பட தயாரிப்பு மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் அஜ்மல் தஹ்சீன் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு பிரபு ராகவ் ஒளிபதிவை மேற்கொண்ட நிலையில் பிரவின் கேஎல் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டது. அந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது இது ஒரு சைக்கோ கொலை தொடர்பான படமாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. கோலிவுட் சினிமாவில் மற்றும் ஒரு சைக்கோ த்ரில்லர் படமான இந்திரா நாளை 22-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்திர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

பரதா: நடிகை அனுபமா பரமேசுவரன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் பரதா. இந்தப் படத்தை இயக்குநர் பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் உடன் இணைந்து நடிகர்கள் தர்ஷனா ராஜேந்திரன், சங்கீதா, ராஜேந்திர பிரசாத், கௌதம் வாசுதேவ் மேனன், ராக் மயூர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர். இதனைப் பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படம் நாளை 22-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்? வைரலாகும் தகவல்

பரதா படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… தீபாவளி ரிலீஸை உறுதி செய்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு!