இந்த தீபாவளி இளைஞர்களின் தீபாவளி… துருவ் விக்ரம், பிரதீப் ரங்கநாதன் படங்களும் வெற்றியடைய வேண்டும் – ஹரிஷ் கல்யாண்

Harish Kalyan: தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டீசல் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த தீபாவளி இளைஞர்களின் தீபாவளி... துருவ் விக்ரம், பிரதீப் ரங்கநாதன் படங்களும் வெற்றியடைய வேண்டும் - ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

Published: 

08 Oct 2025 21:22 PM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் பட்டியளில் உள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan). இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லப்பர் பந்து. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கி இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் டீசல். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தை இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடிகர்கள் வினய் ராய், அதுல்யா ரவி, பி. சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், சாய் கிருஷ்ணா, ஜாகீர் உசேன், ரவி வெங்கட்ராமன், தங்கதுரை, கேபிஒய் தீனா, அபூர்வ சிங் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்.பி. சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர் தேவராஜுலு மார்க்கண்டேயன் மற்றும் கிஷோர். எஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துருவ் விக்ரம், பிரதீப் ரங்கநாதன் படங்களும் வெற்றியடைய வேண்டும்:

இந்த நிலையில் டீசல் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அளித்தப் பேட்டியில் பேசியதாவது துருவ் விக்ரம், பிரதீப் ரங்கநாதன் படங்களும் வெற்றியடைய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இந்த தீபாவளி இளைஞர்களின் தீபாவளியாக இருக்கும் என்றும் அவர் இந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜீனி படம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

இணையத்தில் கவனம் பெறும் ஹரிஷ் கல்யாணின் எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷ் – செல்வராகவன் யாருக்கு சேட்டை அதிகம்… கஸ்தூரி ராஜா சொன்ன விசயம்