மீண்டும் ஆக்ஷன் நாயகனாக ஹரிஷ் கல்யாண்… HK15 படத்தின் டைட்டில் டீசர் இதோ!
HK15 Movie Title Update: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஹரிஷ் கல்யாண். இவரின் தொடர்ந்து படங்கள் உருவாகிவரும் நிலையில், இவரின் 15வது படத்தை இயக்குனர் வினீத் வரப்ரசாத் இயக்கிவருகிறார். இப்படம் HK15 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

ஹரிஷ் கல்யாண்.
நடிகர் ஹரிஷ் கல்யாணின் (Harish kalyan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டீசல் (Diesel). இந்த திரைப்படத்தில் வட சென்னை பகுதியை சேர்ந்த மீனவனாக இவர் நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இப்படத்துடன் பிரதீப் ரங்கநாதனின் டியூட் மற்றும் துருவ் விக்ரமின் பைசன் போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்த காரணத்தினால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்புகள் கிடைக்கவில்லை. இந்த படத்தை அடுத்ததாக இவர் நடித்துவந்த படம்தான் HK15. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வினீத் வரப்ரசாத் (Vineeth Varaprasad) இயக்கிவந்தார். இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நிறைய ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து படக்குழு அப்டேட் செய்துள்ளது.
அதன்படி இந்த படத்திற்கு படக்குழு “தாஷமக்கான்” (Dashamakan) என்று திட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசர் இரண்டையும் படக்குழு ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ரிவால்வர் ரீட்டா படத்தின் கதை இதுதான் – வெளிப்படையாக சொன்ன கீர்த்தி சுரேஷ்!
நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட தாஷமக்கான் படத்தின் டைட்டில் டீசர் :
Here is a small glimpse from the world.
Tamil promo – https://t.co/2wrtkiD9EB
Telugu promo – https://t.co/5wdk7BggG3@VineethVarapra1 @idaaproductions @ThinkStudiosInd @willbrits @Tseries @tseriessouth @PreityMukundan @karthikisc @ganesh_madan @teamaimpr_13… pic.twitter.com/KfXY0gHyof
— Harish Kalyan (@iamharishkalyan) November 22, 2025
இந்த தாஷமக்கான் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் குத்து சண்டை வீரராக நடித்திருப்பதாக தெரிகிறது. மற்ற படங்களை ஒப்பிடும்போது இந்த படத்தில் இவர் அதிக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளதாக இப்படத்தின் சண்டை பயிற்சியால் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இந்த படமானது முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜனின் பட டைட்டிலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. டைட்டில் என்ன தெரியுமா?
இவர் ஏற்கனவே தமிழில் கவினின் ஸ்டார் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து இப்படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழி படமாக வெளியாகவுள்ளதாம். தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் தொடர்பான அறிவிப்புக்களை வெளியான நிலையில், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பாடல்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.