ஜிவி பிரகாஷ் குமாரின் ப்ளாக்மெயில் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Blackmail Movie: ஜிவி பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தொடர்ந்து பிசியாக வலம் வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பது உடன் தானும் படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறா. அந்த வகையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ப்ளாக் மெயில் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் குமாரின் ப்ளாக்மெயில் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

ப்ளாக்மெயில்

Published: 

29 Jun 2025 11:05 AM

 IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் தற்போது ப்ளாக்மெயில் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் அப்டேட் குறித்து படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் மு.மாறன் இயக்கி உள்ளார். இவர் முன்னதாக இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் பிந்து மாதவி, ரமேஷ் திலக், ரெடின் கிங்ஸ்லி மற்றும் முத்துகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது படம் வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. அதன்படி படக்குழு இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தங்களது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளாக்மெயில் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ஜி.வி.பிரகாஷ் குமாரின் நடிப்பில் வரிசைக் கட்டும் படங்கள்:

இந்த 2025-ம் ஆண்டு தொடங்கிய போது நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் நடிப்பில் கிங்ஸ்டன் படம் திரையரங்குகளில் வெளியானது. கடல் சார்ந்த அமானுஷ்யங்களை மையமாக வைத்து த்ரில்லர் படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகை திவ்ய பாரதி நாயகியாக நடித்து இருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் தற்போது படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. இவரது நடிப்பில் தற்போது ப்ளாக்மெயில் படம் வெளியீட்டிற்கு காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் இடிமுழக்கம், 13, மெண்டல் மனதில் ஆகிய படங்களின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

Related Stories
Mamitha Baiju: மமிதா பைஜூ வந்ததும் ‘டியூட்’ படத்தின் பார்வையே மாறிவிட்டது – இயக்குநர் சொன்ன விஷயம்!
Harish Kalyan: எனது கேரியரில் நான் பண்ண பெரிய பட்ஜெட் படம் டீசல் தான் – ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
Parasakthi: இன்னும் 100 நாட்களில் சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் இதோ!
இட்லி கடை படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க!
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த ரவி மோகன்!
திருமண உறவு குறித்து அழகாக பேசிய இறுகப்பற்று படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு…!