டூரிஸ்ட் ஃபேமிலி முதல் தொடரும் வரை… 2025-ம் ஆண்டில் ரசிகர்கள் கொண்டாடிய தென்னிந்திய மொழிப் படங்கள்

Best South films of 2025: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் நாயகன்களுக்காக மட்டும் படம் ஓடும் என்ற நிலை மாறி நல்ல கதையாக இருந்தால் படத்தை நிச்சயமாக மக்கள் கொண்டாடத் தவறியது இல்லை. அப்படி 2025-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களின் லிஸ்டை தற்போது பார்க்கலாம்.

டூரிஸ்ட் ஃபேமிலி முதல் தொடரும் வரை... 2025-ம் ஆண்டில் ரசிகர்கள் கொண்டாடிய தென்னிந்திய மொழிப் படங்கள்

படங்கள்

Published: 

28 Jun 2025 21:27 PM

 IST

டூரிஸ்ட் ஃபேமிலி: நடிகர் சசிகுமார் (Actor Sasikumar) நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் சசிக்குமார் உடன் இணைந்து நடிகர்கள் சிம்ரன், யோகிபாபு, மிதுன் ஜெய் சங்கர், ரமேஷ் திலக், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பக்ஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மிகவும் சீரியசான கதைக்களத்தை மிகவும் காமெடியாகவும் லேசாகவும் மக்கள் மனதில் பதிவும் வகையில் இந்தப் படத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அழகாகக் காட்டியிருப்பார். இப்படிப்பட்ட நபர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள், இவ்வளவு நல்ல மனிதர்கள் எல்லாம் நாட்டில் இருக்கிறார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவிற்கு படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

திரையரங்குகளில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஓடிடியில் வெளியான பிறகு மற்ற மொழி ரசிகர்களிடியேயும் பெரும் பாராட்டுகளை பெற்று வந்தது. திரைப் பிரபலங்களும் படத்தை வெகுவாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ட்ரெய்லர்:

கோர்ட்: ஸ்டேட் Vs நோபடி: இயக்குநர் ராம் ஜகதீஸ் எழுதி இயக்கிய படம் கோர்ட்: ஸ்டேட் Vs நோபடி. இந்தப் படத்தை பிரபல நடிகர் நானி தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து இருந்தார். நடிகர்கள் பிரியதர்ஷி புலிகொண்டா, பி.சாய் குமார், சிவாஜி, ரோகினி, ஹர்ஷ வர்தன், சுபலேகா சுதாகர், ஹர்ஷ் ரோஷன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவது குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டு இருந்தது. கோர்ட் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கோர்ட்: ஸ்டேட் Vs நோபடி படத்தின் ட்ரெய்லர்:

துடரும்: நடிகர் மோகன்லால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் துடரும். இந்தப் படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் ஷோபனா, பிரகாஷ் வர்மா, ஃபர்ஹான் பாசில், மணியன்பிள்ளை ராஜு, பினு பப்பு, இர்ஷாத் அலி, ஆர்ஷா சாந்தினி பைஜு, தாமஸ் மேத்யூ, சங்கீத் பிரதாப் மற்றும் கிருஷ்ண பிரபா ஆகியோரும் நடித்து இருந்தனர்.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான் இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதுபோல ஓடிடியில் வெளியாகி மற்ற மொழி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மோகன்லாலின் துடரும் படத்தின் ட்ரெய்லர்:

Related Stories
Mamitha Baiju: மமிதா பைஜூ வந்ததும் ‘டியூட்’ படத்தின் பார்வையே மாறிவிட்டது – இயக்குநர் சொன்ன விஷயம்!
Harish Kalyan: எனது கேரியரில் நான் பண்ண பெரிய பட்ஜெட் படம் டீசல் தான் – ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
Parasakthi: இன்னும் 100 நாட்களில் சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் இதோ!
இட்லி கடை படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க!
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த ரவி மோகன்!
திருமண உறவு குறித்து அழகாக பேசிய இறுகப்பற்று படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு…!