ஃப்ரீடம் முதல் ஓஹோ எந்தன் பேபி வரை… இந்த வாரம் கோலிவுட் சினிமாவில் என்ன புதுவரவு? லிஸ்ட் இதோ

Theatre Release Movies Update: கோலிவுட் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப் படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த ஜூலை மாதம் 2025-ம் ஆண்டில் இரண்டாவது வாரமும் படங்கள் வரிசையாக வெளியாகின்றது. அது என்ன என்ன படங்கள் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஃப்ரீடம் முதல் ஓஹோ எந்தன் பேபி வரை... இந்த வாரம் கோலிவுட் சினிமாவில் என்ன புதுவரவு? லிஸ்ட் இதோ

படங்கள்

Published: 

09 Jul 2025 21:58 PM

ஃப்ரீடம்: இயக்குநர் சத்ய சிவா எழுதி இயக்கி உள்ள படம் ஃப்ரீடம். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் (Actor Sasikumar) நாயகனாக நடித்துள்ளார். நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மாளவிகா அவினாஷ், சுதேவ் நாயர், போஸ் வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா, சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த ஃப்ரீடம் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் படத்தை தயாரிப்பாளர்கள் பாண்டியன் பரசுராமன், சுஜாதா பாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் இருந்து முன்னதாக டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈத்தது. மேலும் ஃப்ரீடம் படக்குழு தொடர்ந்து படத்தில் இருந்து இரண்டு ஸ்னீக் பீக் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படம் நாளை 10-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரீடம் படத்தின் ட்ரெய்லர்:

தேசிங்கு ராஜா 2: நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள படம் தேசிங்கு ராஜா 2. இந்தப் படத்தை இயக்குநர் எழில் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விமலுடன் இணைந்து நடிகர்கள் ஜனா, பூஜிதா பொன்னடா, ஹர்சிதா பண்ட்லாமுரி, புகழ், ரவி மரியா, சிங்கம்புலி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ள்னர். மேலும் இந்தப் படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் வருகின்ற 11-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read… தமிழ் சினிமா நெகட்டிவ் விமர்சனங்களால் பெரிய பிரச்சனையை எதிர்கொள்கிறது – இயக்குநர் பிரேம் குமார்

தேசிங்கு ராஜா 2 படத்தின் ட்ரெய்லர்:

மிஸ்ஸஸ் & மிஸ்டர்: வனிதா விஜயகுமார் எழுதி இயக்கியுள்ள படம் மிஸ்ஸஸ் & மிஸ்டர். இந்தப் படத்தில் இவரே நாயகியாக நடித்துள்ளார். மேலும் நாயகனாக நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஷகீலா, ஆர்த்தி கணேஷ்கர், சீனிவாசன், அம்பிகா, ஸ்ரீமன் மற்றும் கணேஷ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். படம் வருகின்ற 11-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read… தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்

மிஸ்ஸஸ் & மிஸ்டர் படத்தின் ட்ரெய்லர்:

ஓஹோ எந்தன் பேபி: நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ஓஹோ எந்தன் பேபி. இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மிதிலா பால்கர், ரெடின் கிங்ஸ்லி, மிஷ்கின், கருணாகரன், பாலாஜி சக்திவேல், கீதா கைலாசம், நிர்மல் பிள்ளை, சுஜாதா பாபு, அருண் குரியன், விஜயசாரதி, கஸ்தூரி, நிவாஷினி கிருஷ்ணன், வைபவி டான்டில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வருகின்ற 11-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓஹோ எந்தன் பேபி படத்தின் ட்ரெய்லர்: