திவாகரை தாக்கிய ஒட்டுமொத்த பிக்பாஸ் ஹவுஸ்.. வியன்னா செய்யும் புது பிளான்!

Bigg Boss 9 Tamil: தமிழில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக்பாஸ். தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிவருகிறது. இந்நிலையில் இன்று 26வது நாளில் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடும் திவாகர் மற்றும் FJ-வை தாக்கியது.

திவாகரை தாக்கிய ஒட்டுமொத்த பிக்பாஸ் ஹவுஸ்.. வியன்னா செய்யும் புது பிளான்!

பிக்பாஸ் சீசன் 9 தமிழ்

Published: 

31 Oct 2025 19:40 PM

 IST

கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியானது ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியை தமிழ் பிரபல நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்கிவருகிறார். இதற்கு முன் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) போன்ற நடிகர்களும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழில் ஒளிபரப்பாகி தொடங்கியது. கிட்டத்தட்ட 8 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், இந்த 2025 ஆம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சி மொத்தம் 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிலையில், தற்போது மொத்தம் 16 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

மேலும் இவர்களை தொடர்ந்து வைல்ட் கார்ட் எண்டரியிலும் 4 பிரபலங்கள் நுழைகிறார்கள். இந்நிலையில் இன்று 2025 அக்டோபர் 31 ஆம் தேதியில் வெளியான முதல் 2 ப்ரோமோக்கள் வைரலாகிவருகிறது. அதில் முதல் ப்ரோமோவில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் திவாகர் (Diwakar) மற்றும் FJ-வை தாக்கி பேசிய படியான வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்த ஆண் குழந்தை.. வைரலாகும் போஸ்ட்!

26வது நாளில் வெளியான பிக்பாஸ் 9 தமிழ் முதல் ப்ரோமோ வீடியோ :

இந்த வீடியோவில், ஒட்டுமொத்த போட்டியாளர்களும் தங்களின் வாழ்க்கை அனுபவத்தை கதையாக கூறியிருந்தனர். அதில் யாரவது 2 பேரின் கதை நன்றாக இல்லை, நம்பமுடியவில்லை என்ற விதத்தில் தேர்ந்தெடுக்க சொல்லியிருந்தார்கள். அதில் ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும், வாட்டர்மெலான் திவாகர் மற்றும் FJ-வை தேர்ந்தெடுத்திருந்தனர். இதனால் இந்த முதல் ப்ரோமோவில் அனைவரும் இவர்கள் இருவரை மட்டும் தேர்ந்தெடுத்த நிலையில்,இன்று பிக்பாஸ் எபிசோடில் சண்டை நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரியோவின் ஆண் பாவம் பொல்லாதது படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனம் இதோ

பிக்பாஸ் 9 தமிழ் 2வது ப்ரோமோ :

இந்த ப்ரோமோவில் வியன்னா மற்றும் வாட்டர்மெலான் திவாகர் இருவரும் பேசும்படியாக இருக்கிறது. அவர்கள் இருவரும் இந்த பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்தில் இருந்த போட்டியாளர்களுக்கு, இப்போது இந்த வீட்டில் அவர்கள் ஆடும் விளையாட்டு குறித்து பேசியுள்ளார். இப்போதுதான் இந்த பிக்பாஸ் வீட்டில் அனைவரும் நார்மலாக இருக்கிறார்கள் என அவர் கூறியது போல உள்ளது. மேலும் இந்த வீடியோவில் வியன்னா தனது விளையாட்டு யுக்தியையும் பற்றி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.