தூசி தட்டப்படும் கிடப்பில் கடந்த அக்னி சிறகுகள் படம்… சம்மரில் வெளியிட படக்குழு திட்டம்

Agni Siragugal Movie Release Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் உருவாகி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகாமல் கிடப்பில் கிடந்த படம் அக்னி சிறகுகள். இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

தூசி தட்டப்படும் கிடப்பில் கடந்த அக்னி சிறகுகள் படம்... சம்மரில் வெளியிட படக்குழு திட்டம்

அக்னி சிறகுகள்

Published: 

31 Mar 2026 18:52 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மூடர் கூடம். இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து நாயகனாகவும் நடித்து இருந்தார் நவீன். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நவீன் கொளஞ்சி என்ற படத்தை தயாரித்து படத்திற்கு திரைக்கதையையும் எழுதி இருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநராக நவீன் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி உள்ள படம் அக்னி சிறகுகள். இந்தப் படம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் திரையரங்குகளில் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று காத்திருந்து ரசிகர்கள் படத்தையே மறந்துபோகும் நிலை ஏற்பட்டது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி கவனத்தை ஈர்த்தது. படத்தில் நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நாசர் இருவரும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தினை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தூசி தட்டப்படும் கிடப்பில் கடந்த அக்னி சிறகுகள் படம்:

‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி. சிவா தயாரிப்பில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம் தனது அனைத்துத் தடைகளையும் கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது, ​​மே 2026-இல் இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. நீண்ட காலத் தாமதத்திற்குப் பிறகு, இத்திட்டம் இறுதியாக மீண்டும் சரியான பாதையில் திரும்பி, திரையரங்குகளில் வெளியாவதற்குத் தயாராக உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… வலிமைக்கு அப்பறம் என்னோட கருப்பு அப்டேட்டிற்காகதான் ரசிகர்கள் அதிகம் காத்திருந்தனர் – ஆர்.ஜே.பாலாஜியின் கலகல பேச்சு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 8 ஆண்டுகளைக் கடந்தது ராம் சரண் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ரங்கஸ்தலம் – வீடியோ வெளியிட்ட படக்குழு

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..