Fahadh Faasil : டாம் குரூஸுடன் ஹாலிவுட் பட வாய்ப்பு.. நடிக்க மறுத்த ஃபகத் பாசில் – என்ன காரணம்?
Fahadh Faasil Rejects Hollywood Movie : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக அசத்தி வருபவர் ஃபகத் பாசில். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் இயக்குநரின் படத்தில் நடிக்க மறுத்துப் பற்றியும், அதன் காரணம் குறித்தும் பேசியிருக்கிறார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

ஃபகத் பாசில்
நடிகர் ஃபகத் பாசில் (Fahadh faasil), மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரின் முன்னணி நடிப்பில், தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் மாரீசன் (Maareesan). இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வெளியான இப்படமானது மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இப்படத்தில் அவருடன் நடிகர் வடிவேலுவும்(Vadivelu) முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, ஜூலை 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் ஃபகத் பாசில் ஒரு திருடனாக நடித்திருந்தார். இப்படத்தை அடுத்ததாக இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகக் காத்திருக்கும் படம்தான் ஓடும் குதிரை சாடும் குதிரை (Odum Kuthira Chaadum Kuthira).
இப்படத்தின் புரோமோஷன் தொடர்பாகச் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நேர்காணலில் அவர், ஆஸ்கார் விருது வென்ற, ஹாலிவுட் (Hollywood) இயக்குநர் அலெஹான்ட்ரோ இனாரிட்டு (Alejandro Iñárritu ) இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தது குறித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க : ‘தண்டகாரண்யம்’ படத்தின் ரிலீஸ் எப்போது? பா. ரஞ்சித் வெளியிட்ட அப்டேட் இதோ!
ஹாலிவுட் படத்தில் நடிக்க மறுத்தது குறித்து நடிகர் ஃபகத் பாசில் விளக்கம்
அந்த நேர்காணலில் நடிகர் ஃபகத் பாசில் , ” உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் அந்த ஆடிஷனுக்கு பிறகு, ஹாலிவுட் இயக்குநருக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதற்குக் காரணம் நான் ஆங்கிலத்தை உச்சரிக்கும் விதம் தான் என புரிந்துகொண்டேன். அதன் காரணமாக அவர் என்னை 3 முதல் 4 மதங்கள் வரை அமெரிக்காவில் தங்கச் சொன்னார். சம்பளமே கொடுக்காமல் தங்கச் சொன்னார்கள்.
இதையும் படிங்க : அனுஷ்கா – விக்ரம் பிரபுவின் ‘காதி’ – 2வது சிங்கிள் ரிலீஸ் எப்போது?
மேலும் அந்த படத்திற்கான அட்வான்ஸ் கூட எனக்குக் கொடுக்கவில்லை. அதனால் அந்த படத்திலிருந்து விலக வேண்டும் என முடிவு செய்தேன். அந்த ஆடிஷன் இல்லையென்றால் , நான் அதற்குப் பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கூட கிடைத்திருக்காது. இருந்தும், நான் அவருடன் போனில் வீடியோ கால் பேசினேன். அந்த உரையாடலுக்கு பிறகே, அவர் தேடும் நபர் நான் இல்லை என அவர் தெரிந்திருக்கலாம். மேலும் அந்த படத்தில் நடிக்கவேண்டும், என்ற உந்துதல் எதையும் எனக்குள் நான் உணரவில்லை” என அந்த நேர்காணலில் நடிகர் ஃபகத் பாசில் ஓபனாக பேசியிருக்கிறார். அந்த ஹாலிவுட் படத்தில் முன்னணி நாயகனாக டாம் க்ரூஸ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஃபகத் பாசிலின் மாரிசன் பட ஓடிடி ரிலிஸ் அறிவிப்பு பதிவு
Ellaruma sendhu Thiruvannamalai poitu varuvoma? 🤭😅 pic.twitter.com/BbOvAJQj58
— Netflix India South (@Netflix_INSouth) August 17, 2025
இந்த மாரீசன் படமானது திரையரங்குகளில் மக்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து வரும் 2025, ஆகஸ்ட் 22ம் தேதியில் , பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் பரவி வருகிறது.