5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது எனக்கென யாரும் இல்லையே பாடல் வீடியோ

Insurance Kompany Movie Enakena Music Video: தமிழ் சினிமாவில் தற்போது மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தில் இருந்து வெளியான எனக்கென என்ற பாடல் தற்போது 5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது எனக்கென யாரும் இல்லையே பாடல் வீடியோ

எனக்கென யாரும் இல்லையே பாடல் வீடியோ

Published: 

24 Feb 2026 16:53 PM

 IST

தமிழ் சினிமாவில் மக்கள் எப்போது வெளியாகும் என்று அதிக அளவில் கேள்வி எழுப்பியப் படம் வலிமை என்று அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தின் அப்டேட்டை கேட்டு கேட்டு இணையத்தை தெறிக்கவிட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமா மக்கள் அதிகமாக கேட்டு வரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் ஆகும். இந்தப் படம் கடந்த 2018-ம் ஆண்டு முதலே சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தினை லைகா புரடெக்‌ஷன் தயாரிப்பதாகவும் இதில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனக நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்பு அந்த தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்‌ஷன்ஸ் படத்தை தயாரிப்பதில் இருந்து விலகியது.

பின்பு இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் எஸ்.எஸ்.லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் வெளியீடு குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இறுதியில் படத்தின் வெளியீடு மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு படத்தின் வெளியீடு தள்ளிவைத்துக்கொண்டே இருந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது எனக்கென யாரும் இல்லையே பாடல்:

இந்த நிலையில் இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் எனக்கென யாரும் இல்லையே என்ற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தப் பாடல் முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான ஆல்பம் பாடல் ஆகும். இந்தப் பாடல் தற்போது இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் படத்தில் இருந்து வெளியாகி தற்போது 5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… அடுத்த 5 வருஷத்திற்கான திட்டத்தை ரஜினிகாந்த் என்னிடம் சொன்னார்… ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரஜினி, கமல், விஜய்… நீங்க யார் ரசிகர்? அனிருத்தின் மாஸ் பதில்

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்