கதை தேர்வு குறித்து பாராட்டிய ரசிகர்… கலகலப்பாக பேசிய துல்கர் சல்மான்!
Actor Dulquer Salmaan: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். தொடர்ந்து இவரது நடிப்பில் பான் இந்திய மொழிகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மான்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan). இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து இவர் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இந்த நிலையில் இறுதியாக மலையாள சினிமாவில் இவர் தயாரித்து நடித்தப் படம் லோகா சாப்டர் 1 சந்திரா. அதன்படி இந்தப் படம் 5 பாகங்களாக வெளியாக உள்ளதாக முன்னதாகவே படக்குழு அறிவித்து இருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படம் மலையாள சினிமாவில் வசூலில் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர் இந்த லோகா சாப்டர் 1 சந்திரா படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் காந்தா. பீரியட் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் துல்கர் சல்மான் பேசியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
கதை தேர்வு குறித்து கலகலப்பாக பேசிய துல்கர் சல்மான்:
அதன்படி அந்த நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் துல்கர் சல்மானிடம் எப்படி உங்களது கதை தேர்வு எப்படி எப்பவும் சிறப்பாக உள்ளது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் துல்கர் சல்மான், நான் நல்ல படங்கள் பண்ணும் போதெல்லாம், ரசிகர்கள் என்னுடைய ஸ்கிரிப்ட் தேர்வு நல்லா இருக்குன்னு சொல்றாங்க. ஆனா நான் ஒரே ஒரு தோல்வியை மட்டும் கொடுத்தா, அதே பார்வையாளர்கள் கேலி பண்ணுவாங்க, எனக்கு ஸ்கிரிப்ட் படிக்கவே தெரியாது. என் முயற்சி எப்போதும் நல்ல படங்கள் எடுக்கணும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பராசக்தி படத்தில் இருந்து அடி அலையே பாடலின் ரிகர்சல் வீடியோ வெளியானது!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Fan: How is your script selection always Good❓#DulquerSalmaan: Whenever I do good films, audiences says my script selection are good👌. But if I give only 1 Flop same audience mocked, that i don’t even know how to read script🙁. My effort is to make always good Films🫡 pic.twitter.com/xPwqrmQUSr
— AmuthaBharathi (@CinemaWithAB) November 9, 2025
Also Read… சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்