Dulquer Salmaan: 14 வருடங்களுக்குப் பிறகு நான் செய்த விஷயம்.. என் அப்பா முதலில் பதற்றமானார் – துல்கர் சல்மான்!

Dulquer Salmaan About Mammootty: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். இவரின் தயாரிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் லோகா. இப்படத்தின் பஜெட் குறித்து முதலில் மம்மூட்டி பதற்றமடைந்தது பற்றி துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Dulquer Salmaan: 14 வருடங்களுக்குப் பிறகு நான் செய்த விஷயம்.. என் அப்பா முதலில் பதற்றமானார் - துல்கர் சல்மான்!

மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான்

Published: 

12 Nov 2025 16:19 PM

 IST

நடிகர் துல்கர் சல்மானின் (Dulquer Salmaan) நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் திரைப்படம்தான் காந்தா (Kaantha). இப்படத்தில் துல்கர் சல்மான் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் அவருடன் நடிகர் ராணாவும் (Rana) இணைந்து தயாரித்துள்ளார். இந்த படமானது கடந்த 1960ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் துல்கர் சல்மான், ராணா, பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) , சமுத்திரக்கனி (Samuthrakani), மற்றும் பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025 நவம்பர் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற 2 மொழி படமாக தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் இணையத்தில் மக்களிடையே பிரபலமாகிவரும் நிலையில், தற்போது இப்படத்தின் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துல்கர் சல்மான், லோகா (Lokah) படத்தை தயாரிக்கும்போது மம்மூட்டி (Mammootty) பதற்றமடைந்தது பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிப்பு

லோகா திரைப்படத்தை தயாரிக்கும்போது மம்மூட்டி பதற்றமடைந்தது பற்றி பேசிய துல்கர் சல்மான்:

அந்த நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “திரைப்படத்தின் பட்ஜெட் நாங்கள் நினைத்ததை விடமும் 2 மடங்காகியிருந்தது. இந்த படத்தின் பட்ஜெட் என்ன என தெரிந்ததும் எனது அப்பா மம்முட்டி பதற்றமடைந்தார். மேலும் லோகா படத்தின் இனிவரும் பகுதிகளில் மம்முட்டி நிச்சயமாக இடம்பெறுவர்.

இதையும் படிங்க : மெய்யழகன் படத்தில் கமல் ஹாசன் பாடல் பாடியது இப்படிதான் – ஓபனாக பேசிய இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த்

மேலும் நானும் எனது அப்பாவும் இணைந்து நடிக்கும் முதல் படமாக லோகா இருக்கும். மேலும் சினிமாவில் சுமார் 14 வருடங்களுக்கு பின் நான் சம்பாதித்ததில் மிகவும் மகிழ்ச்சையாகாவே இருக்கிறேன். இதை நான் என்னுடைய தந்தையிடம் கேட்டால் அவர் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்” என்று அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்தார்.

காந்தா திரைப்படம் குறித்து துல்கர் சல்மான் பகிர்ந்த எக்ஸ் பதிவு :

இந்த காந்தா படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. மேலும் இந்த படத்தின் மீது சர்ச்சைகளும் எழுந்துவருகிறது. இப்படம் வரும் 2025 நவம்பர் 14ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், மக்களிடையே நிச்சயம் சூப்பர் ஹிட் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.