கோலிவுட் முதல் பாலிவுட் வரை… நாளை என்னென்ன படம் ரிலீஸ் ஆகுது தெரியுமா?

Kollywood to Bollywood this week theatre release movies list here: தமிழ் சினிமா முதல் கோலிவுட் சினிமா வரை இந்த வாரம் பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அந்தப் படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை... நாளை என்னென்ன படம் ரிலீஸ் ஆகுது தெரியுமா?

படங்கள்

Published: 

07 May 2026 17:55 PM

 IST

29 படம்: தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் ரத்னகுமார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆடை என்ற படத்தை இயக்கினார். வித்யாசமான கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ரத்னகுமார் எழுதி இயக்கி உள்ள படம் 29. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் விது நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். அவருடன் இணைந்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்து உள்ளார். மேலும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நாளை 08-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரிடம்: மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷேன் நிகாம். இவரது நடிப்பில் அடுத்தடுத்து மலையாள சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ஷேன் நிகாம் நடிப்பில் மலையாள சினிமாவில் உருவாகி உள்ள படம் ட்ரிடம். இந்தப் படத்தை இயக்குநர் மார்ட்டின் ஜோசப் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலமாக இவர் மலையாள சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் நாளை 08-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள் – எந்த படத்தை ஃபர்ஸ்ட் பாப்பீங்க?

டாடி கி ஷாதி: இந்தி சினிமாவில் ஃபேமிலி காமெடி படமாக உருவாகி உள்ளது டாடி கி ஷாதி படம். இந்தப் படத்தை இயக்குநர் ஆஷிஷ் ஆர். மோகன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் நீது கபூர், கபில் ஷர்மா, சரத் குமார், சாடியா கதீப், ரித்திமா கபூர், யோகராஜ் சிங், தேஜு கோலாபுரே, தீபக் கே. தத்தா, ஹூடா ஜிதேந்தர், அதிதி மிட்டல், நிகத் ஹெக்டே, விதான் எஸ் சர்மா, ஸ்வர்ணா பாண்டே, இஷான் சாதா, சம்பா ஃப்ளோராவே, ஜாகோப் மொலிஹாம் டேவிட், சம்பா ஃப்ளோராவ் டேவிட் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… கருப்பு படம் தாமதமாக வெளியாக இதுதான் காரணம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..