கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Director Vignesh Raja talks about Mamitha Baiju role in Kara movie: தமிழ் சினிமாவில் தற்போது ரசிகரகள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கர. இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் குறித்து இயக்குநர் பேசியது வைரலாகி வருகின்றது.

மமிதா பைஜூ - தனுஷ்
மலையாள சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகை மமிதா பைஜூ. தொடர்ந்து மலையாள சினிமாவில் இரண்டாம் நாயகியாக நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து மமிதா பைஜூ மலையாள சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நாயகியாக நடித்து மலையாள சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பான் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பிரேமலு. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை மமிதா பைஜூவிற்கு தென்னிந்திய சினிமாவில் படங்களின் வாய்ப்பு குவியத் தொடங்கியது. குறிப்பாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதன்படி மமிதா பைஜூவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக்கட்டி காத்திருக்கின்றது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னதாக நடிகை மமிதா பைஜூவின் நடிப்பில் டியூட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை தொடர்ந்து ஜன நாயகன் வெளியாக வேண்டிய நிலையில் படம் தள்ளிப்போனதால் தற்போது மமிதாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இரண்டாவதாக வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என்பது குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்?
மமிதா இதற்கு முன்பு ‘#Dude’ போன்ற, மனதிற்கு இதமளிக்கும் வகையிலான படங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இதில் எந்தவிதமான கவர்ச்சி அம்சங்களும் இருக்காது என்பதை நான் அவரிடம் மிகத் தெளிவாகவே கூறிவிட்டேன். அவர் தன்னை முழுமையாகவே ஒரு இராமநாதபுரம் கிராமத்துப் பெண்ணாக உருமாற்றிக்கொண்டார். ஒப்பனையிலிருந்து ஆடை அலங்காரம் வரை, ஒரு உண்மையான கிராமத்துப் பெண்ணைப் போலவே தோற்றமளிக்கவும், அந்த உணர்வை உள்வாங்கிக்கொள்ளவும் அவர் மிகுந்த மெனக்கெடலைச் செலுத்தினார்.
அவர் தனது நடிப்பில் மட்டுமல்லாமல், தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் உணர்வு ஆழத்தையும், அதன் போராட்டங்களையும் வெளிப்படுத்துவதிலும் மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டார். மமிதா தனது நடிப்பின் மூலம் உங்கள் மனதை நிச்சயம் நெகிழச் செய்வார். இதுவரை ரசிகர்கள் கண்டிராத, மமிதாவின் முற்றிலும் புதியதொரு பரிணாமமாக இந்தப் படம் அமையப்போகிறது என்று இயக்குநர் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார்.
Also Read… Nooru Saami: மாய கனவோ… விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் முதல் பாடல் வெளியானது!
இணையத்தில் வைரலாகும் விக்னேஷ் ராஜா பேச்சு:
Dir #VigneshRaja Interview
What kind of role does #MamithaBaiju play in this film..?
Mamitha has earlier acted in “#Dude” and feel-good type films, building her own fan base 💖 But for this film, I clearly told her that there would be no glamour element at all ❌
She… pic.twitter.com/oj0fvfjfQM
— Movie Tamil (@_MovieTamil) March 26, 2026
Also Read… தனுஷ் மருமகனின் புதுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போடரை வெளியிட்ட விஜய் சேதுபதி