மங்காத்தா படத்திற்கு 2 கதை… இயக்குநர் வெங்கட் பிரபு சொன்ன உண்மை!

Venkat Prabhu About Mankatha Sequel : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் வெங்கட் பிரபு. இவர் நடிகர்கள் அஜித் குமார் முதல் தளபதி விஜய் வரை பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார் . இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், மங்காத்தா படத்திற்காக 2 கதைகளை எழுதியதாகக் கூறியிருந்தார். அதைப் பற்ற விளக்கமாகப் பார்க்கலாம்.

மங்காத்தா படத்திற்கு 2 கதை... இயக்குநர் வெங்கட் பிரபு சொன்ன உண்மை!

வெங்கட் பிரபு மற்றும் அஜித் குமார்

Published: 

08 Jul 2025 09:40 AM

இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர இயக்குநர்களில் ஒருவர். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித்குமார் (Ajith kumar) வரை முன்னணி பிரபலங்களுடன் படங்களை இயக்கியுள்ளார். இவருக்குத் தமிழில் அறிமுக திரைப்படமாக அமைந்தது, சென்னை 600028 (Chennai 600028). கடந்த 2007ம் ஆண்டு வெளியான இப்படத்தில் மிர்ச் சிவா (Shiva), ஜெய் (Jai) , வைபவ், பிரேம்ஜி (Premji) என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். கிரிக்கெட் மற்றும் நண்பர்களை மையமாகக் கொண்டு இப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களை இயக்கினார் வெங்கட் பிரபு. இவர் சரோஜா, கோவா போன்ற படங்களை இயக்கியிருந்தார். இப்படங்களை அடுத்ததாகத் தல அஜித் குமாரின் நடிப்பில் இவர் இயக்கியப் படம்தான் மங்காத்தா (Mankatha). கடந்த 2011ம் ஆண்டு இப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

இந்த படமானது 2011ம் ஆண்டில் வெளியான படங்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றியிருந்தது. இந்த படத்திலும் நடிகர்கள் வைபவ், அர்ஜுன், அஞ்சலி, லட்சுமி ராய், என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தே நிலையில், இப்படம் அப்போது சுமார் ரூ. 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இந்நிலையில், முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, மங்கத்தா படத்திற்காக 2 கதையை எழுதியதாகக் கூறியுள்ளார். அதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

மங்காத்தா திரைப்படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேச்சு :

முன்னதாக பேசிய நேர்காணலில் இயக்குநர் வெங்கட் பிரபு, உண்மையைச் சொல்லப்போனால், இந்த மங்காத்தா திரைப்படத்திற்காக நானா இரு கதைகளை எழுதியிருந்தேன். இரு கதைகளை எழுதி பின் இந்த கதையே ஓகே தன என மங்காத்தா படம் உருவானது. மேலும் அந்த இரு கதைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அப்போது என்னிடம் பேசிய அஜித் குமார் சார் என்னிடம் , “இந்த கதையை வைத்து முதல் பாகம் எடுத்துவிட்டு, மற்றொருகதையை தொடர்புப்படுத்தி மங்காத்தா 2 படம் எடுக்கலாமா?” என என்னிடம் கேட்டார். அந்த 2வது கதையைத் திரைப்படமாக எடுத்திருந்தால், மிகப் பெரிய ஆக்ஷ்ன் படமாக இருந்திருக்கும்.

ஆனால் மற்ற நடிகர்கள் எல்லாம் வருத்தப்படுவார்கள், மங்காத்தா 1ல் நடித்த பாதி நடிகர் இறந்துவிட்டார்கள். அப்படி இருக்க எவ்வாறு இரண்டாம் பாகம் வேண்டாம் என நினைத்தேன். மேலும் இந்த படத்தில் பிரேம்ஜியை நடிக்க வைப்பதற்குக் காரணம் என்னவென்றால், அவர் இந்த படத்தில் ஐஐடி வேலைபார்ப்பவராக நடித்திருந்தார். அது எதற்காக என்றால் ஒரு நகைச்சுவைக்காகத்தான். அதனால்தான் பிரேம்ஜியும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்” என இயக்குநர் வெங்கட் பிரபு ஓபனாக கூறியிருந்தார். ஒருவேளை மங்காத்தா 2 திரைப்படம் உருவாகியிருந்தால் ரசிகர்கள் மத்தியில் நடிகர் அஜித்திற்கு இன்னும் பிரபலம் கிடைத்திருக்கும். தற்போது இந்த நேர்காணல் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.