Madharaasi: மக்களை ஈர்க்கும் படம்.. மதராஸி படத்துக்கு ஷங்கர் வாழ்த்து!

Shankar Congratulates Madharaasi Crew : நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதியில் வெளியான படம் மதராஸி. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் கூடிய இந்த படத்திற்கு தமிழ் பிரபல இயக்குநர் எஸ்.ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Madharaasi: மக்களை ஈர்க்கும் படம்.. மதராஸி படத்துக்கு ஷங்கர் வாழ்த்து!

மதராஸி படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.ஷங்கர்

Published: 

06 Sep 2025 12:02 PM

 IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதியில் வெளியான அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படம்தான் மதராஸி (Madharaasi). இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்துள்ளார். மேலு சுமார் 5 வருடங்களுக்கு பின், தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதத்தில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR.Murugadoss) இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த மதராஸி படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காதல் கதைக்களத்துடன் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னணி கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் வெளியான 2வது படமாகும். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒருபடி மேலாக, வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் (Vidyut Jammwal) ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் ஹீரோவாக கலக்கிவரும் நிலையில், தமிழில் வில்லனாக இந்த மதராஸி படத்தை நடித்துள்ளார். இந்த படத்திற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் இயக்குநர் எஸ். ஷங்கரும் (S.Shankar) வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் மற்றும் வித்யுத் ஜாம்வாலை புகழ்ந்து மற்றும் மதராஸி படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்.. மதராஸி முதல் நாள் வசூல் இவ்வளவா?

மதராஸி படக்குழுவை வாழ்த்தி ஷங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பதிவில் இயக்குநர் ஷங்கர், பல சுவாரஸ்ய கதைக்களம் கொண்ட, அனைவரையும் ஈர்க்கக்கூடிய கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக மதராஸி படம் இருகிறது. மேலும் ஏ.ஆர். முருகதாஸின் ஐடியா மற்றும் உணர்ச்சிகளை அற்புதமாக இணைந்துள்ளார். காதல் கதையில் , க்ரீன் காட்சிகளையும் இணைந்து அருமையாக இயக்கியுள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயனின் கதாபாத்திர சித்தரிப்பும் சுவாரஸ்யமாகவும் மற்றும் வித்தியாசமாகவும் உள்ளது. இதில் ஒரு அதிரடி ஆக்ஷ்ன் ஹீரோவாகவும் அசத்தியுள்ளார். இதை அடுத்ததாக வித்யுத் ஜாம்வாலின் நடிப்பு ஆஹா.., பார்வையாளர்களால் அவரது பெருமையை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை என்று அந்த பதிவில் இயக்குநர் எஸ். ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கார்த்தியின் கைதி 2 படத்தில் நடிக்கிறேனா? வெற்றிமாறன் சொன்ன விளக்கம்!

தற்போது இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இயக்குநர் எஸ். ஷங்கர் மதராஸி படத்தை பார்த்து பாராட்டியிருக்கும் நிலையில், மேலும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. வணிக ரீதியாக இப்படம் வெற்றி பெரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.