RJ Balaji: அட்லீயின் ராஜா ராணி படத்தை நான் கலாய்த்திருக்கிறேன்.. ஆனால் அவர் இப்போது – ஆர்.ஜே.பாலாஜி!

RJ Balaji About Director Atlee : தமிழில் தற்போது வளர்ந்துவரும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரின் இயக்கத்தில் கருப்பு திரைப்படமானது, வெளியாக தயாராகியுள்ளது. இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் இயக்குநர் அட்லீயின் வளர்ச்சி குறித்து புகழ்ந்துள்ளார்.

RJ Balaji: அட்லீயின் ராஜா ராணி படத்தை நான் கலாய்த்திருக்கிறேன்.. ஆனால் அவர் இப்போது - ஆர்.ஜே.பாலாஜி!

அட்லீ குமார் மற்றும் ஆர்ஜே பாலாஜி

Updated On: 

02 May 2026 18:01 PM

 IST

கோலிவுட்டில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்து, பின் லீட் நாயகனாகவும் தற்போது பிரபல இயக்குநராகவும் இருந்தவருபவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji). இவரின் இயக்கத்தில் இதுவரை மொத்தமே 2 படங்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் 3வது படமாக வெளியாக தயாராகியுள்ளதுதான் கருப்பு திரைப்படம் (Karuppu). இதை ஆர்.ஜே.பாலாஜி இயக்க, நடிகர் சூர்யா (Suriya) லீட் நாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருடன் திரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா,ஷிவதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

இந்த படமானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் பேசியிருந்த ஆர்.ஜே.பாலாஜி, அதில் ஆரம்பத்திலிருந்த இயக்குநர் அட்லீ (Director Atlee) மற்றும் தற்போது அவரின் வளர்ச்சி குடித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கூலி படத்தின் மீதான விமர்சனம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் விளக்கம்

இயக்குநர் அட்லீ குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசிய விஷயம்:

அந்த நேர்காணலில் அவர் பேசுகையில், “நான் ஆரம்பத்தில் ஆர்.ஜே.-வாக இருக்கும்போது சினிமா ரிவியூ பண்ணுவேன். அப்போது ராஜா ராணி படத்தை கலாய்த்திருக்கிறேன். அந்த படம் 2013ம் ஆண்டில் வெளியானது என நினைக்கிறேன். நான் அப்போது பார்த்த அட்லீக்கும், இப்பொது பெரிய படங்களை இயக்கம் அட்லீக்கும் பயங்கர வித்தியாசம் இருக்கு. அதே போல தயாரிப்பாளர் ஜி.கே. விஷ்ணு ஒரு புதுமுக இயக்குநரை, விஜய் சாரின் தெறி படத்தை தேர்ந்தெடுத்ததே பெரிய ஆச்சர்யம். அதுபோல இதுவரை ஷாருக்கானின் நடிப்பில் வெளியான எனத் படங்களும் ரூ 1000ம் கோடிக்கும் மேல் வசூலித்ததில்லை.

இதையும் படிங்க: ஓஜி கூட்டணி இஸ் பேக்… ஜெயராம் – ஊர்வசி நடிப்பில் வைரலாகும் பரிமளா & கோ படத்தின் டைட்டில் டீசர்

ஆனால் அதிலே இயக்கியிருந்த ஜவான் படம் சூப்பர் ஹிட் படமாக ரூ 1000ம் கோடிக்கும் மேல் வசூலித்தது. மேலும் தற்போது பலம்வாய்ந்த அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தையும் இயக்கிவருகிறார். ஆரம்பத்தில் அவரின் படங்களுக்கு நிறைய ட்ரோல்கள் வந்தது, அந்த படம் மாதிரிக்கு இருக்கு.. இந்த படம் மாதிரி இருக்கு என சொன்னார்கள். ஆனால் அட்லீ அதற்கெல்லாம் பதில் அவரின் வெற்றியாக காண்பித்தார். மேலும் அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன், அவரின் படங்களுக்கு நான் ஒரு ரசிகர்” என அதில் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார்.

கருப்பு திரைப்படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட பதிவு:

கருப்பு படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் வெளியாகும் நிலையில், அதன் ட்ரைலர் மே 8ம் தேதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us
Related Stories
நிவின் பாலி – மமிதா பைஜூவின் பெத்லஹேம் குடும்ப யூனிட் பட ஷூட்டிங் நிறைவு – வைரலாகும் பதிவு!
ஒணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளி வெளியகும் பிரித்விராஜின் கலிஃபா படம் – அப்டேட் இதோ
Anikha Surendran: பட்டதாரியான அனிகா சுரேந்திரன்.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!
நெல்சனின் முதல் படம் பாதியிலேயே நின்னுடுச்சு… ஆனா இப்போ – நெல்சன் குறித்து பெருமையாக பேசிய ஆர்.ஜே.பாலாஜி
karuppu: பட்டாச கொளுத்துங்கடா.. சூர்யாவின் கருப்பு படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!
தனுஷ் படத்திற்கு முன்பு மாரி செல்வராஜ் அந்த ஹிட் படத்தின் பார்ட் 2 இயக்க உள்ளாரா? வைரலாகும் தகவல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..