Rathna Kumar: நான் தான் ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தை இயக்கவிருந்தேன்.. ஆனால் – இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்த தகவல்!

Why Rathna Kumar left Benz Movie: இயக்குநர் ரத்னகுமார், கோலிவுட் சினிமாவில் தனது இயக்கத்தில் வித்தியாசமான படங்களை கொடுத்துவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தை, தான் இயக்கவிருந்தது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

Rathna Kumar: நான் தான் ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தை இயக்கவிருந்தேன்.. ஆனால் - இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்த தகவல்!

பென்ஸ் திரைப்படம் பற்றி ரத்னகுமார்

Updated On: 

03 May 2026 11:37 AM

 IST

கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரத்னகுமார் (Rathna Kumar). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டில் வெளியான மேயாத மான் (Meyaadha Maan) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்த நிலையில், அதன் பிறகு குளு குளு மற்றும் ஆடை போன்ற படங்களை இயக்கியிருந்தார். இயக்குநராக இவர் தொடர்ந்து புதிய படங்களில் பணியாற்றிவந்த நிலையில், எழுத்தாளராகவும் படங்களில் பணியாற்றிவருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) படங்களில் வசனம் மற்றும் எழுத்தாளராக இருந்துவருகிறார். மாஸ்டர் முதல் கூலி (Coolie) போன்ற பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் புதிதாக 29 தி பிலிம் என்ற படமானது தயாராகியுள்ளது. இப்படமானது வரும் 2026 மே 8ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ரத்னகுமார் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் அவர், ஆரம்பத்தில் ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தை இயக்கவிருந்தது பற்றி மற்றும் அதிலிருந்து விலக காரணம் பற்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தலைவர் 173 படத்தில் இருந்து விலகியதற்கு நிஜமான காரணம் இதுதான் – சுந்தர் சி ஓபன் டாக்

ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தை இயக்காததற்குக் காரணம் பற்றி ரத்னகுமார்:

அந்த நேர்காணலில் ரத்னகுமார் பேசுகையில், “ஆரம்பத்தில் நான் கூலி திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றவேண்டாம் என நினைத்தேன். ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் எழுதிய, ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தை, நான்தான் இயக்கவேண்டியிருந்தது. நான் அந்த படத்தில் முழுமையாக கவனம் செலுத்தவேண்டும் என விரும்பினேன்.

இதையும் படிங்க: இந்த வாரத்தில் விஜய் டிவியில் டிஆர்பியில் டாப் 1 இடத்தை பிடித்த சீரியல் எது தெரியுமா?

இருப்பினும் கூலி படத்தின் கதையை எழுதும்போது, என்னால் அந்த படத்துடன் ஒன்றிப்போக முடியவில்லை. அதனால் எனது சொந்த கதையிலும், 29 தி பிலிம் படத்தின் மீது கவனம் செலுத்தலாம் என முடிவு செய்தேன். ஒரு இயக்குநராக எனது தொழில் வாழ்க்கையில், நான் ஒருபோதும் எழுத்துப் பணியில் ஈடுபட்டதில்லை” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

பென்ஸ் படத்தை இயக்காததற்கு காரணம் பற்றி ரத்னகுமார் தெரிவித்தது குறித்த பதிவு:

இயக்குநர் ரத்னகுமார் லோகேஷ் கனகராஜின் AA23 படத்திலும் எழுத்தாளராக பணியாற்றிவருகிறார். இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 ஜூன் மாதத்தில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..