My Lord: சசிகுமாரின் ‘மை லார்ட்’ படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகிறது? அறிவிப்பு இதோ!
My Lord Trailer Release Update: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சசிகுமார். இவரின் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள படம்தான் மை லார்ட். இந்த படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

சசிகுமாரின் மை லார்ட்
நடிகர் சசிகுமார் (Sasikumar) சினிமாவில் இயக்குநராக தமிழ் சினிமாவில் நுழைந்தார். பின்னர் கதநாயாகனாக நடித்து மக்களிடையே பிரபலமானார். கமர்ஷியல் படங்கள் மட்டுமல்லாமல் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருக்கிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist family). கடந்த 2025ம் மே மாதத்தில் வெளியான இப்படம் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில் இப்படமானது சர்வதேச சிறந்த திரைப்பட விழாக்களிலும் இடம்பிடித்திருந்தது. இந்த படத்தை அடுத்தாக ப்ரீடம் (Freedom) மற்றும் மை லார்ட் (My Lord) போன்ற படங்களிலும் நடித்துவந்தார்.
இதில் ப்ரீடம் படமானது சில பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இயக்குநர் ராஜு முருகன் (Raju Murugan) இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சைத்ரா ஜே. ஆச்சார் ( Chaithra J. Achar) இணைந்து நடித்துள்ள படம்தான் மை லார்ட் . இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை அடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜன நாயகனுக்கு நடந்தது எந்தப் படத்துக்கும் நடக்கக் கூடாது – சுதா கொங்கரா பேச்சு!
சசிகுமாரின் மை லார்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது :
சசிகுமார் மற்றும் சைத்ரா ஜே அசார் இணைந்தது நடித்துள்ள மை லார்ட் படமானது மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தை ஜப்பான், ஜோக்கர் போன்ற படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கண்டிஷன் ஃபாலோ பண்ணுங்கடா டயலாக் வைத்தது ஏன்… நடிகர் ஜீவா விளக்கம்
இந்த படமானது 2026ம் ஆண்டில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ட்ரெய்லர் நாளை 2026 ஜனவரி 19ம் தேதியில் மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாம். இப்படத்தின் ட்ரெய்லரை தொடர்ந்து இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படமானது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துவரும் நிலையில், வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகுமாரின் மை லார்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு:
The countdown begins. ⏳#MyLord Trailer drops tomorrow | 6 PM
A film by @Dir_Rajumurugan
Produced by @Olympiamovis @ambethkumarmla@SasikumarDir #ChaithraJAchar @RSeanRoldan @YugabhaarathiYb @gurusoms #NiravShah #sathyarajnatrajan #munipalraj #JayaPrakash #ashasarath… pic.twitter.com/VR0tcyiyQh
— Director Rajumurugan (@Dir_Rajumurugan) January 18, 2026