அனஸ்வராவின் அந்தப் படத்தப் பார்த்ததில் இருந்து நான் இயக்கும் படத்தில் அவரைதான் நாயகியாக்க வேண்டும் என்று நினைத்தேன் – இயக்குநர் சொன்ன விசயம்!

Director Madhan: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த மதன் தற்போது இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இவர் தான் இயக்கும் படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜனை நாயகியாக ஆக்கியது ஏன் என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அனஸ்வராவின் அந்தப் படத்தப் பார்த்ததில் இருந்து நான் இயக்கும் படத்தில் அவரைதான் நாயகியாக்க வேண்டும் என்று நினைத்தேன் - இயக்குநர் சொன்ன விசயம்!

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், மதன்

Published: 

03 Sep 2025 14:57 PM

 IST

நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். மேலும் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் அபிஷன் ஜீவிந்த் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவிந்த் அடுத்ததாக என்னப் படம் இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் அடுத்ததாக படம் இயக்கவில்லை நாயகனாக நடிக்கிறார் என்ற செய்தி கசிந்தது. இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் களமிறங்கியுள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. அதன்படி அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய மதன் என்பவர் இந்தப் படத்தை இயக்குவதாகம் இந்தப் படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கமிட்டானதும் உறுதியானது. மேலும் இந்தப் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரது தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனஸ்வராவை நாயகியாக தேர்வு செய்ய இதுதான் காரணம்:

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குநர் மதன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜனை தேர்வு செய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில் அனஸ்வரா ராஜன் மலையாள சினிமாவில் நடித்த தண்ணீர் மதன் தினங்கள் பார்த்ததில் இருந்து தான் இயக்கும் படத்தில் அவரைதான் நாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.

Also Read… வாடிவாசல் பட ஸ்கிரிப்டை கேட்டாரா சூர்யா? வெற்றிமாறன் பகிர்ந்த விஷயம்!

படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… எனக்கு முதல் ப்ளாக்பஸ்டர் படத்தை கொடுத்தது சிவகார்த்திகேயன் தான் – அனிருத்