Rajinikanth : ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.. கூலி படத்தில் வின்டேஜ் ரீமேக் பாடல் இடம்பெற்றுள்ளதாம்?
Rajinikanths Coolie Movie Update : நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் பழைய பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கான உரிமையையும் வங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) 171வது திரைப்படம்தான் கூலி (Coolie). இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் (Sun Pictures) நிறுவனமானது தயாரிக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இறுதியாக லியோ (Leo)திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தனர். இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான இந்த படமானது எதிர்பார்த்ததை விடவும் அதிகம் வரவேற்பைப் பெற்று ஹிட்டானது. இந்த படத்தைத் தொடர்ந்துதான் கூலி திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார். ரஜினிகாந்த்தின் இந்த கூலி திரைப்படத்தில் அவருடன் பான் இந்திய நடிகர்கள் பலரும் நடித்துள்ளார்கள், நடிகர்கள் அமீர்கான் (Aamir Khan), உபேந்திர ராவ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan), சத்யராஜ், மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.
இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு தொடங்கிய நிலையில், அதைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்தது, மேலும் இந்த படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தில் ரஜினியின் பழைய பாடல் ஒன்றை வைத்துள்ளதாக கூறியுள்ளார். அந்த வின்டேஜ் பாடலை ரீமேக் செய்து இந்த படத்தில் இணைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
கூலி படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
Sound-ah yethu! 📢 Deva Varraaru🔥 #Coolie worldwide from August 14th 😎 @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees @iamSandy_Off @Dir_Chandhru… pic.twitter.com/KU0rH8kBH7
— Sun Pictures (@sunpictures) April 4, 2025
கூலி படத்தில் வின்டேஜ் பாடல் இடம்பெறுமா?
நடிகர் ரஜினியின் கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த நிலையில், அவர் கூலி படத்தின் கதையை எழுதும்போதே வின்டேஜ் பாடல் ஒன்றை கதியில் எழுதியதாகக் கூறியுள்ளார். மேலும் அந்த பாடலுக்கான உரிமையை வாங்கியாச்சு, ஆனால் அந்த பாடல் இந்த படத்தில் இடம்பெறுமா ? அல்லது இல்லையா என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த பாடலின் வைப் ரசிகர்களிடையே இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஒருவேளை ஒத்துப்போகும் என்று நினைத்தால், படத்தின் எடிட்டிங் முடியும் தருணத்தில், அனிருத் கிட்ட சொல்லி, அந்த பாடலையை ரீமேக் செய்ய சொல்லுவேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
ரஜினியின் கூலி படம் :
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த திரைப்படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார். இதுவரை வெளியான லோகேஷ் கனகராஜின் படங்களில் நடிகைகள் யாரும் சிறப்பு நடனமாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.