அல்லு அர்ஜுன் தம்பி திருமணத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் போட்டோ

Director Lokesh Kanagaraj at Allu Arjun Family Function: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க உள்ளார்.

அல்லு அர்ஜுன் தம்பி திருமணத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - வைரலாகும் போட்டோ

அல்லு அர்ஜுன் வீட்டு திருமணத்தில் லோகேஷ் கனகராஜ்

Published: 

07 Mar 2026 13:22 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). இவர் தமிழ் சினிமாவில் எழுதி இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டில் அதிக வசூலைப் பெற்ற படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் நாயகனாக நடிக்கும் படத்தில் முழு கவனத்தையும் செலுத்தினார். அதன்படி இவர் நாயகனாக நடித்து வரும் டிசி படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Director Arun Madheshwaran) எழுதி இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் அனைத்தும் டார்க் பாணியில் இருந்தது போல இந்தப் படமும் இருக்கும் என்பது படத்தில் வீடியோவைப் பார்க்கும் போதே தெரிகிறது.

அதன்படி டிசி படத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க கொலை செய்யும் ஒரு ரூத்லெஸ் நபராக லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இவர் எந்த காரணத்திற்காக கொலை செய்கிறார் என்பது படத்தைப் பார்க்கும்போது புரியும் என்றாலும் நாயகனாக அறிமுகமாகும் முதல் படமே இப்படி இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் உறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் தம்பி திருமணத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்:

இந்த நிலையில் நடிப்பை முடித்துவிட்டும் மீண்டும் இயக்குநர் பணிக்கு திரும்பும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுனை இயக்க உள்ளார். இது தொடர்பான அப்டேட்கள் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்திற்கான பிரீ புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி நடிகர் அல்லு சிரிஷின் திருமணத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… என் மகளுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்… ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது லெஜண்ட் சரவணனின் லீடர் பட டீசர்!

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வீடியோ:

Also Read… சாய் அபயங்கர் இசையில் வெளியானது மீண்டும் ஒரு இன்டிபென்டன்ட் சாங்… ரசிகர்களிடையே வைரலாகும் பவழ மல்லி!

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி