மெய்யழகன் பட கதையை அந்த இரு நடிகர்களை மனதில் வைத்து எழுதினேன்- இயக்குநர் சி.பிரேம் குமார்!

Prem Kumar About Meiyazhagan Story: தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சி.பிரேம்குமார். இவர் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான 96 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தை அடுத்தாக தற்போது புது படங்களிலும் பணியாற்றிவருகிறார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் வெளியான மெய்யழகன் படத்தின் கதையை யாரை நினைத்து எழுதினார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

மெய்யழகன் பட கதையை அந்த இரு நடிகர்களை மனதில் வைத்து எழுதினேன்- இயக்குநர் சி.பிரேம் குமார்!

சி பிரேம் குமார்

Published: 

22 Dec 2025 20:31 PM

 IST

இயக்குநர் சி. பிரேம் குமார் (C.Prem Kumar) என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது 96 திரைப்படம்தான். தனது இயக்கத்தில் வெளியான முதல் படத்தின் மூலமாகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த 96 படத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் திரிஷா (Trisha) இணைந்து நடித்திருந்த நிலையில் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்தாக இவர் இயக்கியிருந்த தமிழ் திரைப்படம்தான் மெய்யழகன் (Meiyazhagan). இந்த திரைப்படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்தி (Karthi) மற்றும் அரவிந்த் சுவாமி (Arvind Swamy) இணைந்து நடித்திருந்தனர். இவரிகளின் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் பீல் குட் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் ரிலிஸின்போது இப்படம் மக்களிடையே அளவிற்கு கொண்டாடப்படாமல் இருந்த நிலையில், ஓடிடியில் வெளியான பின் மக்களிடையே வேற்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இந்த படத்தின் கதையை அந்த நடிகர்களை மனதில் வைத்து எழுதினேன் என்பது குறித்து இயக்குநர் சி. பிரேம்குமார் மனம் திறந்துள்ளார். அந்த நடிகர்கள் வேறுயாருமில்ல்லை, ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் கமல்ஹாசனாம் (Kamal Haasan). இது குறித்து விவரமாக தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: ‘Racing isn’t acting’.. அஜித் குமாரின் கார் ரேஸ் ஆவணப்படத்தின் டீஸர் வெளியானது!

மெய்யழகன் திரைப்படம் குறித்து இயக்குநர் பிரேம் குமார் பேசிய விஷயம்:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் சி.பிரேம் குமார், அதில் “ஆரம்பத்தில் இந்த மெய்யழகன் திரைப்படத்தின் கதையை ஓடிடி தளங்களுக்காக பிரத்யோகமாக வெளியிட திட்டமிட்டேன். பின்புதான் அதை பெரிய திரைப்படமாக திரையரங்குகளுக்கு கொண்டுவரவேண்டும் என நினைத்தேன். நான் முதல் முதலில் இப்படத்தின் கதையை எழுதும்போது கமல்ஹாசன் சார் மற்றும் ரஜினிகாந்த் சாரை மனதில் வைத்துதான் எழுதினேன்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் ரஜினியை அழகாக பயன்படுத்தியிருக்கார் நெல்சன் – சிவராஜ்குமார்

மெய்யழகன் திரைப்படம் குறித்து கார்த்தி வெளியிட்ட பதிவு :

இந்த மெய்யழகன் திரைப்படத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி, ராஜ்கிரண், நடிகை ஸ்ரீ திவ்யா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த. இந்த படமானது ஒருநாளை இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படமானது ஒரு குடும்ப கதைக்களத்தை மையமாக கொண்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியானபோது அந்தளவிற்கு வரவேற்பை பெறாவிட்டாலும், தற்போது ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை