12 ஆண்டுகளை நிறைவு செய்தது அல்போன்சு புத்திரனின் நேரம் படம் – வைரலாகும் போஸ்ட்!
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானப் படம் நேரம். இந்தப் படத்தில் நடிகர்கள்கள் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நசீம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் படம் வெளியாகி தற்போது 12 ஆண்டுகளை கடந்துள்ளதைப் படக்குழு கொண்டாடி வருகின்றது.

நேரம்
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் இயக்குநர் அல்போன்சு புத்திரன் (Alphonse Puthren). இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நேரம் படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் முன்னதாக 2009-ம் ஆண்டு அவர் இயக்கிய அதே பெயரில் வெளியான குறும்படத்தின் நீட்டிக்கப்பட்ட பதிப்பாகும். இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டது. படத்தில் பெரும்பான்மையான நடிகர்கள் மலையாள நடிகர்கள் என்றாலும் தமிழிலும் இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தின் மூலம் நடிகர்கள் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நசீம் இருவரும் தமிழில் அறிமுகம் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் பாபி சிம்ஹா இந்த இரண்டு மொழி பதிப்புகளிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மனோஜ் கே. ஜெயன், ஷம்மி திலகன், லாலு அலெக்ஸ், வில்சன் ஜோசப், நாசர், தம்பி ராமையா, ஜான் விஜய் மற்றும் ஷபரீஷ் வர்மா என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருந்தார். இது இவரது அறிமுகப் படம் ஆகும்.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாக படத்தினை புரமோஷன் செய்யும் விதாமாக படக்குழு படத்தில் இருந்து பிஸ்தா பாடலை வெளியிட்டது. இது அந்த நேரத்தில் ரசிகர்களிடையே அதிகம் கவணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. மேலும் இந்தப் பாடலைத் தொடர்ந்து படம் வெளியானபோது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
இந்த நிலையில் இந்தப் படத்தின் மலையாள பதிப்பு மே மாதம் 10-ம் தேதி 2013-ம் ஆண்டும் தமிழ் பதிப்பு மே மாதம் 17-ம் தேதி 2013-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடந்ததை படக்குழு கொண்டாடி வருகின்றது. மேலும் இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தப் படத்தின் மூலம் அறிமுகம் ஆன நடிகர்கள் பலர் தற்போது முன்னணி நடிகர்களாவும் இருந்து வருகின்றனர். இந்தப் படத்தை இயக்கிய அல்போன்சு புத்திரன் தான் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படம் மலையாளம் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.