Abhishan Jeevinth: எனது அடுத்த திரைப்படம் இப்படித்தான் இருக்கும் – அபிஷன் ஜீவிந்த் பகிர்ந்த விஷயம்!
Abhishan Jeevinth Next Films: தமிழ் சினிமாவில் தனது இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படத்தின் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானவர் அபிஷன் ஜீவிந்த். இவரின் நடிப்பில் வித் லவ் என்ற படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ள நிலையில், தான் இயக்கம் அடுத்த படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

அபிஷன் ஜீவிந்த்
கோலிவுட்டில் கடந்த 2025ம் ஆண்டு மே 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம்தான் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த படத்தில் சசிகுமார் (Sasikumar) மற்றும் சிம்ரன் (Simran) முன்னணி வேடத்தில் நடிக்க, ஒரு வித்தியாசமான கதைங்கலத்தில் இப்படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தை அறிமுக இயக்குநரான அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth) இயக்கியிருந்தார். இந்த படமானது இவருக்கு பெரும் வரவேற்பை கொடுக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) மூலத்தில் சூர்யா (Suriya) வரை பல்வேறு நடிகர்களும் பாராட்டியிருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகராகவும் வித் லவ் (With Love) என்ற படத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் (Madhan) என்பவர் இயக்க, மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) கதநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.
தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அபிஷன் ஜீவிந்த், தான் இயக்கும் அடுத்த படங்கள் குறித்தும், அப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2016 முதல் 2022.. சிறந்த நடிகர் – நடிகைகள் யார்? தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
தனது அடுத்த திரைப்படங்கள் குறித்து பகிர்ந்த இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்த்:
அந்த நேர்காணலில் அபிஷன் ஜீவிந்த் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் பேசிய அவர், “டூரிஸ்ட் பேமிலி பட வெற்றியை தொடர்ந்து சூர்யா சார் மற்றும் நானி சார் என்னை அழைத்து பாராட்டினார்கள். அப்போது அவர்களுக்காக நான் எந்த ஒரு கதையையும் எழுதவில்லை. மேலும் இயக்குநராக எனது அடுத்த திரைப்பட நிச்சயமாக ஒரு பெரிய படமாக இருக்கும்.
இதையும் படிங்க: விது – ப்ரீத்தி அஸ்ரானியின் ’29 தி பிலிம்’ படத்தின் ஷூட்டிங் ஓவர்.. படக்குழு வெளியிட்ட வீடியோ இதோ!
எமோஷனல் மற்றும் ஆக்ஷன் காமெடி கதைக்களத்துடன் இருக்கும். இப்படமானது ஒரு தனித்துவமான ஒன் லைனராகவும், மிக சிறப்பாகவும் இருக்கும். மேலும் எனது 3வது படம் அறிவியல் புனைக் கதைகளைக் கொண்ட ஒரு நகைச்சுவையான படமாக இருக்கும்” என்று அந்த நேர்காணலில் ஆபிசுடன் ஜீவிந்த் தெரிவித்துள்ளார்.
வித் லவ் படம் குறித்து அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
8 days to go 🤗 https://t.co/TvYpG7g38T
— Abishan Jeevinth (@Abishanjeevinth) January 29, 2026
இந்த வித் லவ் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளர். இவரின் தயாரிப்பில் இப்படமானது மிக பிரம்மாண்டமாகவே உருவாகியுள்ளது. இப்படம் ஷூட்டிங் ஆரம்பமாகி வெறும் 45 நாடுகளிலே படம் முழுவதுமாக எடுக்கப்பட்டுவிட்டது. தற்போது வெளியீட்டிற்கு தயாராகியுள்ள நிலையில், மக்களிடையே வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.