துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி.. இளம் பெண் குற்றச்சாட்டு!

Dhinil Babu Allegation: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துவருபவர் துல்கர் சல்மான். இவரின் தயாரியுப்பு நிறுவனம்தான் வேஃபேரர் பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் கீழ் உருவாக்கவுள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி, இணை இயக்குநர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக இளம் பெண் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி.. இளம் பெண் குற்றச்சாட்டு!

துல்கர் சல்மான்

Published: 

16 Oct 2025 19:10 PM

 IST

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபல நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar) என்ற படமானது வெளியாகி சுமார் ரூ 100ன் கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட்டானது. இந்நிலையில் தொடர்ந்த இவர் புதிய படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பாளராகவும் வேஃபேரர் பிலிம்ஸ் (Wayfarer Films) என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த நிறுவனத்தின் கீழ் சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கவைத்த திரைப்படம்தான் லோகா (Lokah). நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இதில் முன்னணி நாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது உலகளாவிய வசூலில் இதுவரை சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இந்நிலையில், இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மீது இளம் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி, இணை இயக்குநர் தினில் பாபு (Associate Director Dhinil Babu) தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண் ஒருவர் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இந்நிலையில் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் பாபு மீது புகார் அளித்து இந்த பிரச்னைக்கும், நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுத்துள்ளது. மேலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வ பக்கத்தில்தான் வெளியிடப்படும் என படக்குழு தெளிவுப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திரையரங்குகளில் வசூலை வாரிக்குவிக்கும் காந்தாரா சாப்டர் 1.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி

துல்கர் சல்மானை வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பை வாங்கித்தருவதாக கூறி, அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவரது புகாரின் அடிப்படையில், எர்ணாகுளம் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: அனிருத்தின் பிறந்த நாள்… ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய பாரடைஸ் படக்குழு

இந்நிலையில் வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனம், தினில் பாபு மீது தங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்தியதாக புகார் அளித்துள்ளது. தற்போது இந்த வழக்கானது விசாரணையில் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனம், நடிகர்களுக்கான அழைப்புகள் தங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் மட்டுமே பதிவேற்றப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

துல்கர் சல்மானின் தயாரிப்பில் வெளியான லோகா படம் பற்றி படக்குழு வெளியிட்ட பதிவு

இந்த லோகா படமானது, மலையாள சினிமாவிலே அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையும் படைத்துள்ளது. மேலும் இப்படமானது திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும் ஓடி வருவதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.