விஜய் மாதிரி மற்ற ஹீரோக்கள் வேலை செய்தால்… புகழ்ந்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு

Producer Dil Raju: தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் தில் ராஜு. சமீபத்தில் இவர் அளிக்கும் பேட்டிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இவரது தயாரிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்த விஜய் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

விஜய் மாதிரி மற்ற ஹீரோக்கள் வேலை செய்தால்... புகழ்ந்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு

தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் விஜய்

Published: 

06 Jul 2025 13:20 PM

தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு (Producer Dil Raju). தெலுங்கில் பல படங்களை தயாரித்த இவர் தமிழிலும் ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். தில் ராஜு தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் ஆனது நடிகர் விஜய் (Actor Vijay) நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் மூலமாகதான். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி எழுதி இயக்கி இருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது தமிழ் ரசிகர்களிடையே அவரை கொண்டு சேர்த்தது என்றே சொல்லலாம்.

விஜய் குறித்து புகழ்ந்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ:

சமீபத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தொடர்ந்து அளித்து வரும் பேட்டிகள் இணையத்தில் மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் தில் ராஜு அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜயின் வேலை குறித்து புகழ்ந்து பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

தில் ராஜூ விஜய் குறித்து பேசியதாவது, நடிகர் விஜய் தனது வேலையில் எப்போது தெளிவாக இருப்பார். ஒரு படத்திற்கு 6 மாதம் கொடுப்பார். அதில் மாதத்திற்கு 20 நாட்கள் கட்டாயமாக நடிப்பார். அதில் எந்த மாற்றமுக் இருக்காது. அவர் ஒரு படத்திற்காக போடும் பட்டியல் எப்போது சரியாக கடைப்பிடிப்பார்.

நடிகர் விஜய் மாதிரி மற்ற ஹீரோக்களும் தங்களது நடிப்பு வேலையை குறிப்பிட்ட நாட்களில் செய்து முடிக்க ஒரு ஷெடியூல் போட்டு வேலை செய்தால் அது தயாரிப்பாளர்களுக்கு கோல்டன் வாய்ப்பாக இருக்கும் என்று தில் ராஜு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தெலுங்கு சினிமாவில் இப்படியான சூழல் இல்லை என்றும் அது காணாமலே போய்விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய வீடியோ: