சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட திட்டம்?

Coolie Movie Update: கோலிவுட் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமா ரசிகர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கூலி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட திட்டம்?

கூலி

Published: 

06 Jul 2025 14:07 PM

நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்கள், சினிமா வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி சினிமா வட்டாரங்களில் திரையுலகில் பரவி வரும் வதந்திகளை வைத்துப் பார்க்கும் போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்‌ஷன் படமான கூலி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரைங்குகளில் வெளியாகும் போது உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாக உள்ளதாக தெரிகின்றது. ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் கூலி படம்?

இணையத்தில் கசிந்துள்ள தகவலின்படி, சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது பிரபல் ஹம்சினி என்டர்டெயின்மென்ட். பான் இந்திய அளவில் உருவாகும் படங்களை உலக அளவில் விநியோகம் செய்வதில் முன்னிலை வகிக்கிறது இந்த நிறுவனம். இந்த ஹம்சினி என்டர்டெயின்மென்ட் உலகளவில் பல்வேறு மொழிகளில் உருவாகும் படங்களை உலக அளவில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஹம்சினி என்டர்டெயின்மென்ட் முன்னதாக தமிழில் நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டுள்ளது. அதே போல தெலுங்கு மொழியில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவாரா படத்தை 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள கூலி படத்தையும் உலக அளவில் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடிகளில் வெளியிட திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. அப்படி இந்த செய்தி உண்மை என்றால் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் இதுவரை வெளியிட்ட படங்களில் இந்தப் படத்தின் வெளியீட்டு எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி படம் குறித்து ஹம்சினி என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: