Dhruv Vikram: ரஜினிகாந்த் இன்னும் உச்சத்தில் இருக்க காரணம் அதுதான்- ரஜினிகாந்த் குறித்துப் பேசிய துருவ் விக்ரம்!

Dhruv Vikram About Rajinikanth: சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் துருவ் விக்ரம். இவரின் நடிப்பில் பைசன் படமானது விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய துருவ் விக்ரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒப்பற்ற திறமையை பற்றியும் மற்றும் அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.

Dhruv Vikram: ரஜினிகாந்த் இன்னும் உச்சத்தில் இருக்க காரணம் அதுதான்- ரஜினிகாந்த் குறித்துப் பேசிய துருவ் விக்ரம்!

ரஜினிகாந்த் மற்றும் துருவ் விக்ரம்

Published: 

12 Oct 2025 18:27 PM

 IST

தமிழில் பிரபல இளம் கதாநாயகனாக இருந்துவருபவர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). இவர் பிரபல நடிகரான சியான் விக்ரமின் மகனாவார். இவரும் தனது தந்தையை போல, சினிமாவில் கலக்கிவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 3 திரைப்படங்களானது வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவரின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள 4வது படம்தான் பைசன் (Bison). இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநரான மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கியுள்ளார். இந்த படம் மாரிசெல்வராஜின் 5வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைசன் படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் அதிரடி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) இணைந்து நடித்துள்ளார்.

இவர்கள் இருவரின் ஜோடியானது இப்படத்திl முதன் முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய துருவ் விக்ரம், தலைவர் ரஜினிகாந்தின் (Rajinikanth) உச்சத்திற்கு காரணம் என்ன என்பது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: பைசன் படத்தை தொடர்ந்து அடுத்தது அந்த நடிகரின் படம் தான் – மாரி செல்வராஜ் ஓபன் டாக்

ரஜினிகாந்த் குறித்து புகழ்ந்து பேசிய துருவ் விக்ரம்:

அந்த நேர்காணலில் நடிகர் துருவ் விக்ரம், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக பைசன் படம் பற்றி பல்வேறு விஷயங்களை தெரிவித்திருந்தார். அந்த வகையில் தொடர்ந்து பேசிய இவர், நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார். அதில் பேசிய துருவ் விக்ரம், ” தலைவர் ரஜினிகாந்தின் ஈடு இணையற்ற ஆற்றலையும், அவரின் திறமையையும் நான் எப்போதும் போற்றியிருக்கிறேன்.

இதையும் படிங்க: கருப்பு சாமியும் கன்று குட்டியும் கலங்க வைக்கிறது.. இட்லி கடையை பாராட்டிய செல்வராகவன்!

அவர் இத்தனை வருடங்களுக்கு பிறகும், இன்னும் அவர்தான் உச்சத்தில் இருந்துவருகிறார். மேலும் மக்களுடன் தொடர்பில் எப்போதும் இருக்கிறார். மேலும் நல்ல படங்களோ, அல்லது நீங்களும் எதாவது நல்லது செய்தால் அவர் உங்களை நேரில் அழைப்பார் அல்லது சந்தித்து பேசுவார். இதுதான் தலைவரின் முன்னேற்றத்திற்கு காரணம்” என்று நடிகர் துருவ் விக்ரம்,  ரஜினிகாந்த் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

துருவ் விக்ரமின் பைசன் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் பதிவு :

இந்த பைசன் படமானது கபடி மற்றும் கிராமத்து கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இப்படத்தின் பாதி கதையானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக மாரி செல்வராஜ் கூறியிருந்தார். அந்த வகையில் 2025 தீபாவளியை முன்னிட்டு வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்த பைசன் படமானது வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.