ஷூட்டிங் ஆரம்பிக்கிற ஒரு வாரம் முன்னாடிதான் பைசன் கதை படிச்சேன் – நடிகர் துருவ் விக்ரம்

Actor Dhruv Vikram: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பைசன். இந்தப் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் படம் குறித்து துருவ் விக்ரம் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஷூட்டிங் ஆரம்பிக்கிற ஒரு வாரம் முன்னாடிதான் பைசன் கதை படிச்சேன் - நடிகர் துருவ் விக்ரம்

துருவ் விக்ரம்

Published: 

14 Oct 2025 12:30 PM

 IST

இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj) இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் பைசன் காளமாடன். கபடியை மையமாக வைத்து ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு படத்தின் அனுபவம் குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. மேலும் படத்தின் ஷூட்டிங்கிங் போது நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து நட்டிகர்கள் பேசியதும் ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்று 13-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு பைசன் காளமாடன் பத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயமாக படம் அருமையாக இருக்கும் என்று தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தின் ட்ரெய்லர் வீடியோவும் யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் துருவ் விக்ரம் அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஷூட்டிங் ஆரம்பிக்கிற ஒரு வாரம் முன்னாடிதான் பைசன் கதை படிச்சேன்:

அந்தப் பேட்டியில் நடிகர் துருவ் விக்ரம் கூறியதாவது படம் எந்த மாதிரியான கதை என்பது முன்பே தெரியும். ஆனால் படத்தின் படப்பிடிப்பிற்கு ஒரு வாரம் இருக்கும் போது தான் கதையை முழுவதுமாக படித்தேன். படத்தின் டயலாக் எல்லாம் ஷூட்டிங் நடைபெறும் அன்றைக்கு தான் ஸ்பாட்டில் வைத்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறுவார். அதுவரைக்கும் என்ன டயலாக் பேசப்போகிறோம் என்பது எல்லாம் தெரியாது என்றும் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Dhruv Vikram: ரஜினிகாந்த் இன்னும் உச்சத்தில் இருக்க காரணம் அதுதான்- ரஜினிகாந்த் குறித்துப் பேசிய துருவ் விக்ரம்!

இணையத்தில் கவனம் பெறும் துருவ் விக்ரமின் பேச்சு:

Also Read… ரெட்டை கதிரே… சூர்யாவின் மாற்றான் படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது