Tere Ishq Mein: இந்தியில் மட்டுமே.. மூன்று நாட்களில் அரை சதம் அடித்த தனுஷின் தேரே இஷ்க் மே!

Tere Ishq Mein 3 Day Collection: நடிகர் தனுஷின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் வெளியான 3வது திரைப்படம்தான் தேரே இஷ்க் மே. இப்படம் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. அதிரடி காதல் கதைக்களத்தில் வெளியான இப்படம், 3 நாட்களில் இந்தியில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tere Ishq Mein: இந்தியில் மட்டுமே..  மூன்று நாட்களில் அரை சதம் அடித்த தனுஷின் தேரே இஷ்க் மே!

தேரே இஷ்க் மே

Published: 

01 Dec 2025 17:06 PM

 IST

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர், நடிகர், பாடகர் என பல்வேறு பணிகளை செய்துவருபவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழில் மட்டும் கதாநாயகனாக நடிக்காமல், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழி படங்களிலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த திரைப்படத்தை இந்தி இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷின் கலாட்டா கல்யாணம் (Kalatta Kalyanam) மற்றும் அம்பிகாபதி போன்ற திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இந்த கூட்டணியில் வெளியான 3வது படம்தான் தேரே இஷ்க் மே. இந்த படத்தில் தனுஷ் அதிரடி கதாநாயகனாக நடிக்க, நடிகை கிருத்தி சனோன் (Kriti Sanon) கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படமானது இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில், மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்று 2025 டிசம்பர் 1ம் தேதியுடன் 3 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தியில் மட்டும் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி தனுஷின் இந்த படம் இந்தி சினிமாவில் மட்டுமே சுமார் ரூ 50.95 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவை ஈஷாவில் நடந்த சமந்தா திருமணம்.. இணையத்தில் பரவும் தகவல்!

தேரே இஷ்க் மே படத்தின் 3வது நாளில் வசூல் விவரம் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

தேரே இஷ்க் மே திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது :

நடிகர் தனுஷின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் வெளியான 3வது படம்தான் தேரே இஷ்க் மே. இந்த படமானது முழுக்க அதிரடி காதல், மற்றும் தற்போது இருக்கும் காலத்தில் காதல் என்றால் எப்படி பட்டது என்பது குறித்து விலக்கும் விதத்திலான கதையில் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த 2025ம் நவம்பர் 28ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியான நிலையில், இந்தி மொழியை ஒப்பிடும்போது தமிழில் குறைவான வரவேற்பையே பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: சர்வதேச திரைப்பட விழாவில் காந்தாரா படம் குறித்து ரன்வீர் சிங் செயலால் கிளம்பிய சர்ச்சை.. வைரலாகும் வீடியோ!

இதற்கு காரணம் தமிழில் இப்படம் வெளியாகியிருக்கும் விஷயம் பல ரசிகர்களுக்கு தெரியாது என்பதே உண்மை. பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகி 4 முதல் 6 வாரங்களுக்குள் ஓடிடியில் வெளியாகிவிடும் அந்த வகையில் தனுஷின் தேரே இஷ்க் மே 4 வாரங்களுக்கு பின் ஓடிடியில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 2025ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியன் மறைந்த பிறகு ஏன் நகம் வெட்டக்கூடாது?
ஒரே காரில் வலம் வந்த தோனி - கோலி கூட்டணி - வைரலாகும் வீடியோ
அவரை அடிக்க வேண்டும் என தோன்றியது... ரஹ்மான் குறித்து சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா
‘உருவானது கொசு தொழிற்சாலை’.. டெங்குக்கு எதிராக மக்களை பாதுகாக்க புதிய திட்டம்!!