Dhanush : தனுஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணி.. ‘டி54’ பட பூஜை வீடியோ இதோ!

Dhanushs D54 Shooting Pooja Video : போர் தொழில் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலாமானவர் இயக்குநர் விக்னேஷ் ராஜா. இவரின் இயக்கத்தில் தனுஷ் டி54 திரைப்படம் உருவாக்கவுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படக்குழு அது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.

Dhanush : தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி.. டி54 பட பூஜை வீடியோ இதோ!

டி54 படத்தின் ஷூட்டிங் பூஜை வீடியோ

Published: 

12 Jul 2025 18:08 PM

நடிகர் தனுஷின் (Dhanush) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அதில் ஒன்றுதான் டி54 (D54) திரைப்படம். இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh Raja) இயக்கத்தில், நடிகர் தனுஷ் இந்த புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் தமிழ் பிரபல தயாரிப்பு நிறுவனமான, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டெர்நேஷ்னல் நிறுவனம் (Vels Films International) தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கடந்த 2025, ஜூலை 10ம் தேதியில் வெளியானது. இந்நிலையில், அன்றே இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளும் (Shooting Pooja) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறனும் (Vetrimaaran) கலந்துகொண்டார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் தனுஷின் கூட்டணியில் இந்த டி54 திரைப்படமானது உருவாகவுள்ளது. இந்தப் படமானது விவசாயம் சார்ந்த கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜைகளைத் தொடர்ந்து, படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

டி54 படக்குழு வெளியிட்ட பூஜை வீடியோ :

 

இதையும் படிங்க : தனுஷ் – ராஷ்மிகா மந்தனாவின் ‘குபேரா’ – ஓடிடி ரிலீஸ் எப்போது?

டி54 திரைப்பட நடிகர்கள்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சூர்யா, விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துவரும் நிலையில், டி54 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதையும் படிங்க : வேள்பாரி உலகம்போற்றும் படமாக உருவாகும்.. இயக்குநர் ஷங்கர் பேச்சு!

மேலும் நடிகர்கள் ஜெயராம், கே. எஸ். ரவிக்குமார் முக்கிய ரோலில் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் ஆரம்பமான நிலையில், விரைவில் அடுத்தகட்ட ஷூட்டிங் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் 2025 ரிலீஸ் படங்கள் :

நடிகர் தனுஷின் நடிப்பில் இறுதியாகக் குபேரா படம் வெளியானது. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. மேலும் இப்படத்தை அடுத்ததாக தனுஷின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் இட்லி கடை என்ற படம் ரிலீஸிற்கு காத்திருக்கிறது. இப்படம் வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகிறது. இதை அடுத்ததாக இந்தியில் தயாராகிவரும் தேரே இஷ்க் மெய்ன் படம் வரும் 2025, நவம்பர் 27ம் தேதியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.