Selvaraghavan: உண்மை கதையில்… செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ பட டீசர் வெளியானது!

Manithan Deivamagalam Movie Teaser: தமிழில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் படங்களில் நடித்துவருபவர் செல்வராகவன். இவர் கதாநாயகனாக நடித்துள்ள புது படம்தான் மனிதன் தெய்வமாகலாம். தற்போது இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

Selvaraghavan: உண்மை கதையில்... செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் பட டீசர் வெளியானது!

மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர்

Updated On: 

05 Mar 2026 19:14 PM

 IST

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குநராக சினிமாவில் நுழைந்தவர் செல்வராகவன் (Director Selvaraghavan). இவரின் இயக்கத்தில் தனுஷ் (Dhanush) முதல் சூர்யா (Suriya) வரை, பல்வேறு பிரபலங்கள் இணைந்து படங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில் தற்போது இவரும் படங்களில் கதாநாயகனாகவும், முக்கிய வேடங்களிலும் நடித்துவருகிறார். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருக்கிறார். இந்நிலையில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள புது திரைப்படம்தான் “மனிதன் தெய்வமாகலாம்” (Manithan Deivamagalam Movie). இந்த படத்தில் செல்வராகவான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை குஷீ ரவி (Kushee Ravi) என்பவர் நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் எமோஷனல் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது.

இதை டிரிப் மற்றும் தூக்குத்தூரை போன்ற படங்களை இயக்கியிருந்த, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாக சைத்தன்யா நடிப்பில் வெளியானது வ்ருஷகர்மா கிளிம்ஸ் வீடியோ!

நடிகர் தனுஷ் பகிர்ந்த மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர் குறித்த எக்ஸ் பதிவு:

இந்த மனிதன் தெய்வமாகலாம் என்ற படத்தில் செல்வராகவன் மற்றும் குஷீ ரவி போன்றவர்களுடன், நடிகர்கள் கௌசல்யா, லிரித்திகா, ஹேமா, மைம் கோபி, மகேந்திரன், சதீஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன் இசையமைத்துவரும் நிலையில், வ்யோம் எண்டெர்டெயின்மென்ட் என்ற நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.

இதையும் படிங்க: எதிர்நீச்சல் 2 சீரியலில் வில்லனாக மிரட்டும் வேல ராம மூர்த்தியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்

இப்படத்தை அடுத்ததாக இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் மெண்டல் மனதில் என்ற படமானது தயாராகியுள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், மதுரியா ஜெயின் கதாநாயகையாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமரே இசையமைத்துள்ள நிலையில், உயிரே உயிரே என்ற ப முதல் பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தை அடுத்ததாக 7 ஜி ரெயின்போ காலனி 2 என அடுத்தடுத்த படங்களை செல்வராகவன் இயக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
‘சித்தப்பு சிக்குன்னு சிக்குன்னு வாராலே’… சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’ வீடியோ பாடல் வெளியீடு!
ஒரே நிற உடையில்.. ஒன்றாக திருமண விழாவில் கலந்துகொண்ட விஜய் மற்றும் திரிஷா – வைரலாகும் வீடியோ!
Anaswara Rajan: நான் அந்த நடிகரின் மிகப்பெரிய ரசிகை.. எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – அனஸ்வரா ராஜன்!
வடம் முதல் காதல் ரீசெட் ரிப்பீட் வரை… இந்த வாரம் எந்தப் படத்தை முதலில் தியேட்டரில் பார்ப்பீங்க?
Thalaivar 173: ஆரம்பிகலமா? ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ பட ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தொடக்கம்!
இயக்குநர் சங்கரின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது – நடிகர் சரத்குமார் ஓபன் டாக்!
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி