Dhanush: தனது இயக்கத்தில் எப்போது படம் உருவாகும்? – ரசிகர்களுக்கு தனுஷ் சொன்ன விளக்கம்!
Dhanush Directorial Plans: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநராகவும், நடிகராகவும் இருந்துவருபவர் தனுஷ். இவரின் இவரின் இயக்கத்தில் கடந்த 2025ம் ஆண்டில் மட்டுமே இரு படங்கள் வெளியாகியிருந்தது. அந்த வகையில் தனது இயக்கத்தில் அடுத்து எப்போது படம் உருவாகும் என்பது குறித்து தனுஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

தனுஷ்
நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டில் முதல் படமாக வெளியாக காத்திருப்பதுதான் கர திரைப்படம் (Kara). இதை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்க, வேல்ஸ் பிளம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே கணேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷ் லீட் நாயகனாக நடிக்க, அவருடன் மலையாள நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்துள்ளார். இப்படமானது ஒரு கிராமப்புறத்தில் நடக்கும், கொள்ளை சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்த நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதை தொடர்ந்து கடந்த 2026 ஏப்ரல் 25ம் தேதியில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றிருந்தது. அப்போது தனுஷியிடம் எப்போது அடுத்த படத்தை இயக்கப்போகிறீர்கள் ? என கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு தனுஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அயோத்தி பட இயக்குநருடன் இணையும் விஜய் ஆண்டனி? – வைரலாகும் தகவல்!
தனது இயக்கத்தில் அடுத்த திரைப்படம் எப்போது உருவாகும் என்ற கேள்விக்கு தனுஷ் விளக்கம்:
அண்ட் நிகழ்ச்சியில் தனுஷ் பேசுகையில், “எனக்காக மூணு இயக்குநர்கள் பொறுமையாக ஸ்கிரிப்ட் தயார் செய்துவருகிறார்கள். அவர்களுடனான படங்களை முடிக்கவேண்டும். அதில் பாதி படங்கள் குறித்து ஐசரி சார் கூறியிருந்தார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி சாருடன், ஒரு படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதன் பிறகு மாரி செல்வராஜுடன் படத்தை முடிக்கவேண்டும், இவர்களுக்கு இடையில், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துடனான படம் ஒன்று இருக்கிறது.
இதையும் படிங்க: நீங்க தெரிஞ்சி பண்ணல… நானும் தெரிஞ்சி பண்ணல.. ஆனால் – கர படம் குறித்து தனுஷ் பேச்சு!
அதற்க்கு பிறகு வட சென்னை 2 படத்தை முடிக்கவேண்டும், எப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும் வடசென்னை 2 படம் எந்த ஆர்ட்டரில் வரும் என்று. தற்போது இப்படங்களின் ஷூட்டிங் எல்லாம் முடிப்பதற்கு சில வருடங்கள் தேவைப்படுகிறது. அதை முடிக்கும் வரையில் இயக்கம் பற்றி நான் இப்போதைக்கு யோசிக்கவில்லை” என அவர் தெரிவித்திருந்தார்.
இயக்கம் குறித்து தனுஷ் பேசியது தொடர்பான பதிவு:
#Dhanush on his next directorial 🎬
– Right now, direction is not even on my immediate radar. Three directors are already waiting with scripts for me. First, I need to wrap up the shoot with #RajkumarPeriyasamy. After that, I’ll be acting in a film directed by… pic.twitter.com/qphtv0iexI
— Movie Tamil (@_MovieTamil) April 25, 2026
தனுஷின் கர படமானது வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 2026ம் ஆண்டில் தமிழில் முதலில் வெளியாகும் பிக் ஹீரோவின் படமாக இது அமைந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.