அறிமுக இயக்குநரின் படத்தை தயாரிக்கும் தனுஷ் – வெளியான அறிவிப்பு!
Dhanushs Production New Movie: தமிழ் சினிமாவில் சிறந்த நாயகனாக மட்டுமில்லாமல், சிறப்பான தயாரிப்பாளராக இருந்துவருபவர் தனுஷ். இவர் தற்போது அறிமுக இயக்குநரின் புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது அவரின் ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் 20வது படமாக உருவாக்குவதாக அறிவித்துள்ளர். அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

தனுஷ் புரொடக்ஷனின் புதிய திரைப்படம்
நடிகர் தனுஷ் (Dhanush) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடந்து நடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள படம் கர (Kara). இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமீபத்தில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதில் தனுஷ் நாயகனாக நடிக்க, போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியுள்ளார். மேலும் மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சாரமூடு போன்ற பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துவருகிறது. நடிகர் தனுஷ் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், இயக்குநர் தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளை செய்துவருகிறார்.
அந்த வகையில் இவரின் தயாரிப்பில் ஏற்கனவே பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவரின் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் பிலிம்ஸ் (Wunderbar Films) நிறுவனத்தின் கீழ் 20வது படத்தை புதுமுக இயக்குநரை வைத்து தயாரிக்கவுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சினிமாவில் 26 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் பூரி ஜெகன்நாத்… நெகிழ்ந்து பேசிய விஜய் சேதுபதி!
தனுஷ் தயாரிப்பு நிறுவனத்தின் 20வது படம் குறித்த பதிவு:
Happy to announce our next venture – #Wunderbar20, in association with Primark Productions.
A film directed by Ramesh Nandan.@dhanushkraja @PrimarkProd @Rameshhere22 @lingasamy21 @theSreyas pic.twitter.com/zIpamNIYWi
— Wunderbar Films (@wunderbarfilms) April 20, 2026
நடிகர் தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் 20வது படம் குறித்து அறிவித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரமேஷ் நந்தன் இயக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே ஹோலி வாட்டர், கரை போன்ற குறும்படங்ககளை இயக்கியுள்ளாராம். அந்த வகையில் இவர் இயக்கவுள்ள முதல் படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஒண்டர்பார் பிலிசும் நிறுவனத்தின் 20வது படமாக தயாராகவுள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பூஜைகளுடன் தொடங்கியது விஜய் தேவரகொண்டாவின் புது பட ஷூட்டிங் – வீடியோ இதோ!
ஆனால் இப்படத்தில் யார் நாயகன், யார் நடிகை என இன்னும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் தயாரிப்பில் அவரின் படங்கள் மட்டுமில்லாமல், காக்கா முட்டை, எதிர்ர்நீச்சல் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் தனது படங்கள் மட்டுமில்லாமல், மற்ற நடிகர்களின் படங்களை தயாரிப்பது குறைவு. அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு இருக்கும் மீண்டும் அந்த பணியில் அவர் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.