Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மகனின் பட்டமளிப்பு விழாவிற்காக ஒன்று சேர்ந்த தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: நெகிழ்ச்சி சம்பவம்

Dhanush & Aishwarya Reunite for their Son : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பிரவுட் பேரண்ட்ஸ் என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகனின் பட்டமளிப்பு விழாவிற்காக ஒன்று சேர்ந்த தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: நெகிழ்ச்சி சம்பவம்
தனுஷ் - யாத்ரா - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 31 May 2025 21:11 PM

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவுடன் (Nagarjuna) இணைந்து தனுஷ் (Dhanush) நடித்துள்ள குபேரா (Kubera) திரைப்படம் வருகிற ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 1, 2025 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் தனுஷ், நாகர்ஜூனா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். நிகழ்வில் தனுஷ் பேசுவதைக் கேட்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தனுஷின் மகன் யாத்ரா பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். இந்த நிலையில் அவரது பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு தனது மகனை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, பிரவுட் பேரண்ட்ஸ் என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து நிலையில் தனது மகனுக்காக ஒன்றாக வந்து வாழ்த்தியது தொடர்பாக இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மகனுக்காக ஒன்றாக வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

 

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

தனுஷின் புதிய படங்கள்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. தற்போது அவர் ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெயின் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பயோபிக்கில் தனுஷ் நடிக்கவருக்கிறார். இந்தப் படங்களுக்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், லிவிங்ஸ்டன், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9, 2024 அன்று வெளியான படம் லால் சலாம். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். லைக்கா புரொடக்சன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதோடு வியாபார ரீதியாக தோல்விப் படமாக அமைந்தது. இந்தப் படத்தின் வெளியீட்டின் போது இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவலை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இந்தப்  படம் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜூன் 6 ஆம் தேதி இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ங்கு சிங்குக்கு டும் டும் டும்! மணப்பெண் யார் தெரியுமா..?
ங்கு சிங்குக்கு டும் டும் டும்! மணப்பெண் யார் தெரியுமா..?...
மதயானைக் கூட்டம் இயக்குனர் திடீர் மரணம் - அதிர்ச்சி!
மதயானைக் கூட்டம் இயக்குனர் திடீர் மரணம் - அதிர்ச்சி!...
கணவர் கண்முன்னே உயிரிழந்த மனைவி.. பைக்கில் சென்றபோது விபரீதம்
கணவர் கண்முன்னே உயிரிழந்த மனைவி.. பைக்கில் சென்றபோது விபரீதம்...
கமலுக்கு தமிழில் டப்பிங் பேசிய சித்ரா லட்சுமணன்.. என்ன படம்?
கமலுக்கு தமிழில் டப்பிங் பேசிய சித்ரா லட்சுமணன்.. என்ன படம்?...
டெல்லியில் இடிக்கப்பட்ட மதராஸி கேம்ப்.. தமிழர்களின் நிலை என்ன?
டெல்லியில் இடிக்கப்பட்ட மதராஸி கேம்ப்.. தமிழர்களின் நிலை என்ன?...
குற்றவாளி ஞானசேகரன்.. தண்டனை இன்று அறிவிப்பு!
குற்றவாளி ஞானசேகரன்.. தண்டனை இன்று அறிவிப்பு!...
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை புதிய உத்தரவு
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை புதிய உத்தரவு...
குறைந்தது மழை ... இனி வெளியில் கொளுத்துமா? வானிலை அறிவிப்பு
குறைந்தது மழை ... இனி வெளியில் கொளுத்துமா? வானிலை அறிவிப்பு...
பள்ளிகள் திறப்பு... போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு
பள்ளிகள் திறப்பு... போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு...
வதந்திகளை கிளப்பி என்ன முடிச்சிடலாம்னு நெனச்சா.... தனுஷ் அதிரடி
வதந்திகளை கிளப்பி என்ன முடிச்சிடலாம்னு நெனச்சா.... தனுஷ் அதிரடி...
உங்களுக்கு அடிக்கடி கண்ணீர் வருகிறதா? இந்த பிரச்னையாக இருக்கலாம்!
உங்களுக்கு அடிக்கடி கண்ணீர் வருகிறதா? இந்த பிரச்னையாக இருக்கலாம்!...