Dhurandar 2: வசூலில் பட்டையை கிளப்பும் துரந்தர் 2.. தமிழகத்தில் எழுந்த சர்ச்சை என்ன தெரியும்?

Dhurandar 2 Collection And TN Ban Plea: பாலிவுட் உச்ச நடிகராக இருந்துவருபவர் ரன்வீர் சிங். இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக வெய்யகையிருந்த படம்தான் துரந்தர் தி ரிவெஞ்ச். இப்படமானது வசூலில் பட்டையை கிளப்பிவரும் நிலையில், தற்போது இப்படம் குறித்து சர்ச்சை தமிழகத்தில் வெடித்துள்ளது.

Dhurandar 2: வசூலில் பட்டையை கிளப்பும் துரந்தர் 2.. தமிழகத்தில் எழுந்த சர்ச்சை என்ன தெரியும்?

துரந்தர் 2

Updated On: 

23 Mar 2026 15:55 PM

 IST

இந்தி சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி, வசூலில் பட்டையை கிளப்பிவரும் திரைப்படம்தான் துரந்தர் தி ரிவெஞ்ச் (Dhurandar The Revenge). இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தார் (Aditya Dhar) இயக்க, உச்ச நடிகராக ரன்வீர் சிங் (Ranveer SIngh) நடித்துள்ளார். இந்த படத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் இவர் நடித்து அசத்தியுள்ளார் என்று கூறலாம். இதில் நடிகர்கள் சாரா அர்ஜுன் (Sara Arjun), ஆர்.மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். துரந்தர் 1 திரைப்படமானது கடந்த 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி உலகளவில் சுமார் ரூ 1300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

இதையடுத்து துரந்தர் 2 திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. தமிழில் கடந்த 2026 மார்ச் 21ம் தேதியில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 4 நாட்களை கடந்த நிலையில், இதன் பாக்ஸ் ஆபிஸ் விவரம் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் தலைவர் 173 படத்தின் பணிகள்… சமீபத்திய அப்டேட் என்ன தெரியுமா?

4 நாட்களில் துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படத்தின் வசூல் :

நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் பாகிஸ்தானில் ஸ்பையாக இருக்கும் இந்தியனாக நடித்திருந்தார். அந்த வகையில் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 4 நாட்களை கடந்திருக்கும் நிலையில், உலகளவில் சுமார் ரூ 761 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. இது இந்தியாவில் 550 கோடிகளும், வெளிநாடுகளில் மொத்தம் ரூ 211 கோடிகளை வசூலித்துள்ளதாம். ஆக மொத்தத்தில் ரூ 761 கோடிகளுக்கு மேல் வசூலித்துவருவதாக கூறப்படுகிறது. மேலும் வரும் வாரத்தில் இதைவிடமும் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் தமிழகத்தில் சந்திக்கும் சிக்கல்:

ரன்வீர் சிங்கின் துரந்தர் தி ரிவெஞ்ச் படமானது அரசியல், தேசப்பற்று மற்றும் ஆக்ஷன் போன்ற கதைக்களத்தில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில், தமிழ் மொழியில் கடந்த 2026 மார்ச் 21ம் தேதி முதல் இப்படமானது திரையிடப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் தமிழகத்தில் 2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் பேசும் துரந்தர் தி ரிவெஞ்ச் படத்தை தடை செய்யவேண்டும் என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சினிமாவில் 49 ஆண்டுகளை கடந்த ராதிகா சரத்குமார்.. கேக் வெட்டி கொண்டாடிய ஹாய் படக்குழு!

தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், இப்படம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என மேல்முறையீடு செய்யப்பட்டது. கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இதை மனுவாக தாக்கல் செய்யவேண்டும் என தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். விரைவில் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..