Mohanlal: சினிமா என் இதயத்துடிப்பு.. தாதாசாகேப் பால்கே விருது வென்ற மோகன்லால் பேச்சு!

Mohanlal Speech: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் மோகன்லால். இவருக்கு 2023ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு இவருக்கு அறிவித்திருந்தது. இந்த விருதானது இன்று 2025 செப்டம்பர் 23ம் தேதி தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் கையால் வழங்கப்பட்டுள்ளது.

Mohanlal: சினிமா என் இதயத்துடிப்பு.. தாதாசாகேப் பால்கே விருது வென்ற மோகன்லால் பேச்சு!

தாதாசாகேப் பால்கே விருது வென்ற மோகன்லால்

Published: 

23 Sep 2025 19:43 PM

 IST

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருபவர் நடிகர் மோகன்லால் (Mohanlal). இவர் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாரும் கூட, இவரின் நடிப்பில் இதுவரை சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியிருக்கிறது. மலையாள சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வரும் இவர், தமிழிலும் இருவர், ஜில்லா, உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மலையாள திரைத்துறையில் , தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார். இவ்வாறு சினிமாவிற்காக தனது மகத்தான பணிகளை மோகன்லால் செய்து வருகிறார் . இந்நிலையில், இவருக்கு 2023ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே  விருதை ((Dadasaheb Phalke Award)), மத்திய அரசு கடந்த 2025 செப்டம்பர் 21ம் தேதியில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று (23/09/2025) தேசிய திரைப்பட விருது (National Film Award) வழங்கும் விழாவானது நடைபெற்றிருந்தது. இந்த விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் கையால், நடிகர் மோகன்லால் தாதாசாகேப் பால்கே விருதை பெற்றிருந்தார். விருதை பெற்ற பின் மேடையில் பேசிய மோகன்லால், “சினிமா எனது ஆன்மாவின் இதயத்துடிப்பு” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அவர் பேசியது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : வாத்தி படத்திற்காக தேசிய விருது.. குடியரசு தலைவரின் கையால் விருதை வாங்கிய ஜி.வி. பிரகாஷ் குமார்!

தாதாசாகேப் பால்கே விருதை பெற்ற மோகன்லாலை பேச்சு :

அந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் மற்றும் இந்திய பிரபலங்கள் முன் பேசிய மோகன்லால், “எனக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்திருந்த செய்தி கிடைத்திருந்தபோது, இது ஒரு கனவாக நான் எண்ணவில்லை. இது மிகவும் பெரியது  என நான் நினைத்தேன்.

இதையும் படிங்க : காந்தாரா எனக்கு 5 வருட உணர்ச்சிப் பயணம்.. ரிஷப் ஷெட்டி பகிர்ந்த விஷயம்!

இந்த விருது, மலையாள சினிமாவின் புத்திசாலிதனமான பார்வையாளர்களுக்கு சொந்தமானது.  சினிமா எனது ஆன்மாவின் இதயத்துடிப்பாகும், ஜெய்ஹிந்த்” என தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுளளார். இது தொடர்பான செய்தி தற்போது மலையாள ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மோகன்லால் பேசிய வீடியோ

நடிகர் மோகன்லாலின் நடிப்பில், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படமாக விருஷபா என்ற படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. வரலாற்று கதைக்களத்துடன் மிக பிரம்மாண்டமாக இப்படமானது தயாராகியுள்ளது. இப்படம் வரும் 2025 அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதை தொடர்ந்து, த்ரிஷ்யம் 3 படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் சமீபத்தில் தொடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories