அந்நியன் படத்தின் அம்பி ரோல்.. நடிகர் விக்ரம் சொன்ன உண்மை!

Vikram Talks About Anniyan : சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளியாகி பான் இந்திய அளவிற்கு பிரபலமான திரைப்படம் என்றால் அது, அந்நியன். இந்த படத்தில் அம்பி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்குக் கஷ்டப்பட்டதை பற்றி ஓபனாக பேசியிருந்தார். அதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

அந்நியன் படத்தின் அம்பி ரோல்.. நடிகர் விக்ரம் சொன்ன உண்மை!

விக்ரம்

Published: 

14 Jul 2025 08:28 AM

நடிகர் சியாவின் விக்ரம் (Chiyaan Vikram)  நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் சினிமாவில் நடிகராக அறிமுகமான ஆரம்பத்தில், தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாளம் என்ன தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவருக்குத் தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பை விடவேறு எந்த மொழிகளிலும் பெருமளவு வரவேற்புகள் கிடைக்கவில்லை . இவர் சினிமாவில் நடிகராக அறிமுகமான திரைப்படம் “என் காதல் கண்மணி” (En Kadhal Kanmani). கடந்த 1990ம் ணைட் வெளியான இப்படத்தை இயக்குநர் டி,ஜே, ஜாய் (TJ Joy) இயக்கியிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்துதான் விக்ரம் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் இவருக்கு சினிமாவில் பிரம்மாண்ட வரவேற்பைக் கொடுத்த திரைப்படம் சேது (Sethu). இயக்குநர் பாலாவின் (Bala)  இயக்கத்தில் வெளியான இப்படத்தின் மூலம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டார் விக்ரம்.

இதைத் தொடர்ந்துதான் இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகத்தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இப்படங்களை அடுத்ததாகப் பிரம்மாண்ட படமாக அமைந்தது அந்நியன் (Anniyan). இயக்குநர் எஸ். சங்கர் (S. Shankar) இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படத்தில் கிட்டத்தட்ட விக்ரம் 3 வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் , முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய அவர் , அந்நியன் படத்தில் அம்பி (Ambi) கதாபாத்திரத்தில் நடிப்பதற்குக் கஷ்டப்பட்டதை பற்றி ஓபனாக பேசியிருந்தார். அதை பற்றி பார்க்கலாம்.

அந்நியன் படத்தில் அம்பி கதாபாத்திரம் பறி பேசிய விக்ரம் :

முன்னதாக பேசிய பேட்டி ஒன்றில் நடிகர் சியான் விக்ரமிடம், அந்நியன் படம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அந்நியன் படத்தில், ரெமோ கேரக்டர் பிடிக்கும் மாறும் அந்நியன் கேரக்டர் எனக்கு நிறையப் பிடிக்கும். ஆனால் அந்த அம்பி கதாபாத்திரமாக இருப்பது மிகவும் கடினம். ஏனென்றால் நான் நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாது. ரொம்ப நேர்மையானவனாக, எல்லா விஷயங்களும் சரி எனப் பேசுவது போல, கொஞ்சம் பயந்த சுபாவம் என நானா இல்லை. மேலும் அம்பி கதாபாத்திரத்திற்கு காதலிக்கத் தெரியாது, ரொம்ப குழந்தைத்தனமானவர் இந்நிலையில், அந்நிய படத்தில் அம்பி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத்தான் நான் நிறையக் கஷ்டப்பட்டேன்.

அந்த கதாபாத்திரத்தைத்தான் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கதாபாத்திரம் என சொல்லலாம். ஆனால் இப்போது அந்த கதாபாத்திரம் பற்றி நினைத்துப் பார்த்தால், நம்பித்தான் நல்லவன், அவன்தான் ஹீரோ, எனக்குள் இருக்கிற மாதிரி எல்லாருக்குள்ளும் ஒரு அம்பி என்ற கதாபாத்திரம் நிச்சயம் இருக்கும். அண்ட் படத்தில் நடித்ததற்குப் பின் நானும் சில நல்ல விஷங்களைச் செய்கிறேன், பொது இடங்களில் குப்பைகளைப் போடுவதில்லை எனது சட்டை பயில் அல்லது பேண்ட் பையில் வைத்து குப்பைத் தொட்டியில் போடுவேன். மேலும் வாகனத்தைச் சரியாக அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி ஓட்டுகிறேன் இதற்கெல்லாம் காரணம் சங்கர் சார்தான் அவருக்கு எனது பெரிய நன்றிகளை தெரிவிக்கிறேன்” என நடிகர் சியான விக்ரம் ஓபனாக பேசியிருந்தார்.