Kiss Movie : கவினின் ‘கிஸ்’ திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் அப்டேட் இதோ

Kiss Movie Update : தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கவின். இவரின் முன்னணி நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு தயாராகியிருக்கும் திரைப்படம்தான் கிஸ். இந்த படத்திற்கு சென்சார் குழு என்ன சான்றிதழ் கொடுத்துள்ளது, இப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Kiss Movie : கவினின் கிஸ் திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் அப்டேட் இதோ

கிஸ் திரைப்படம்

Published: 

13 Sep 2025 21:35 PM

 IST

கவினின் (Kavin) முன்னணி நடிப்பில் தமிழ் இறுதியாக வெளியாகியிருந்த படம் பிளடி பெக்கர் (Bloody beggar). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் வெளியானது. இந்த படமானது வெளியாகி மக்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறாமல், தோல்வி படமாகவே முடிந்தது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) தயாரித்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்து நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் (Sathish Krishnan) இயக்கத்தில், கவின் நடித்திருக்கும் படம்தான் கிஸ் (Kiss). இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் அயோத்தி என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிஸ் படமானது ரொமாண்டிக் காதல் மற்றும் காமெடி கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 19ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், சென்சார் குழு இப்படத்திற்கு சான்றிதழை வழங்கியுள்ளது. கிஸ் திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க : கமல்ஹாசன் படத்தில் இணைந்த மலையாள பிரபலம்.. அட இவரா?

கிஸ் படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ் பற்றி படக்குழு வெளியிட்ட பதிவு :

கவினின் கிஸ் திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்

கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் கூட்டணியில் இந்த கிஸ் படமானது உருவாகியுள்ளது. இதில் கவின் கல்லூரி மாணவன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இது முற்றிலும் ரொமாண்டிக் காதல் படமாக உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை மிரட்டல்

இந்த படத்திற்கு சென்சார் குழு “யு/ஏ” தரச் சான்றிதழை கொடுத்துள்ளது. அதன்படி, இந்த கிஸ் திரைப்படத்தை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர் துணையுடன்  நபர்கள் திரையரங்குகளுக்கு சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தகவலானது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

கவினின் புதிய படங்ககள் :

நடிகர் கவினின் கிஸ் திரைப்படத்தை அடுத்ததாக, கிட்டத்தட்ட 2 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். தண்டட்டி பட இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் ஒரு படமும், கனா காணும் காலங்கள் தொடர் இயக்குநர் கென் ராய் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.

இதில் கென் ராய் இயக்கும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கவினின் நடிப்பில் ஹாய் மற்றும் மாஸ்க் போன்ற படங்களும் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.