OTT Movie: தைரியமான பெண்களை குறிவைத்து கொலை செய்யும் கொலையாளி.. விறுவிறுப்பான இந்த படத்தை பார்த்திருக்கீங்களா?

Malayalam Crime Thriller: மலையாள மொழி சினிமாவில் தற்போது வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் நடிகர்கள் ஜோஜு ஜார் மற்றும் பிஜு மேனன் நடித்த, இந்த ஆக்ஷன் க்ரைம் திரில்லர் படத்தை பார்த்திருக்கீங்களா?. அப்ப இதை மிஸ் பண்ணிராதீங்க.

OTT Movie: தைரியமான பெண்களை குறிவைத்து கொலை செய்யும் கொலையாளி.. விறுவிறுப்பான இந்த படத்தை பார்த்திருக்கீங்களா?

மலையாள கிரைம் திரில்லர் படம்

Published: 

06 Apr 2026 08:38 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குநராகவும் படங்களில் பணியாற்றிவருபவர் நடிகர் ஜோஜு ஜார்ஜ் (Joju George). இவர் தமிழில் தக் லைஃப் (Thug Life) மற்றும் ரெட்ரோ (Retro) போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் மற்றும் நடிகை பிஜு மேனன் (Biju Menon) இணைந்து நடித்துள்ள படம்தான் “வலது வஷத்தே கள்ளன்” (Valathu Vashathe Kallan). இந்த படத்தை மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் (Jeethu Joseph) இயக்க, தயாரிப்பாளர் ஷாஜி நடேசன் தயாரித்திருந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகை பிஜு மேனன் போலீஸ் அதிகாரியாகவும், நடிகர் ஜோஜூ ஜார்ஜ் சாதாரண குடும்ப தலைவராக நடித்திருந்தனர்.

இப்படமானது கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த விதத்தில் இப்படம் தற்போது ஓடிடியில் கிடைக்கிறது.எந்த ஓடிடியில் மற்றும் கதைக்களம் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: அதன் தாக்கம்.. கனத்த இதயத்துடன் பல படங்களை நிராகரித்தேன் – மிருணாள் தாக்கூர்!

வலது வஷத்தே கள்ளன் திரைப்படத்தின் கதைக்களம்:

இந்த நடிகர் பிஜு மேனன் போலீஸ் அதிகாரி ஆண்டனி சேவியர் என்ற வேடத்தில் நடித்துள்ளார். அந்த போலீஸ் அதிகாரியின் மகன் பிலிப் என்பவர், சிறுவயதிலிருந்தே, பெண்கள் மீது கோபத்துடனும், அவர்களை அவமானப்படுத்தும் ஆணாகவே வளர்ந்துவருகிறார். அவர் பள்ளியில் படிக்கும்போது, சக மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்கிற. இதையடித்த போலீஸ் அதிகாரி பிஜு மேனன், அவரின் மகனை பள்ளியிலே அவமானப்படுத்திவிடுகிறார். இவ்வாறு அவர் செய்தும், பிலிப் அடங்குவதாக இல்லை. பின் கல்லூரிக்கு சென்றபிறகும், பெண்கள் மீது தனது வக்கிரத்தை காட்டுகிறார்.

இதையும் படிங்க: இப்படி எல்லாம் ஒரு புகார் கொடுப்பாங்களா? இந்தியில் இந்த காதல் எ ஜாக்ஃப்ரூட் மிஸ்ட்ரி படத்தை மிஸ் செய்யாதீர்கள்!

இதை கண்டிக்க முடியாமல், அவரின் தந்தை பிஜு மேனன் தவிக்கிறார். அவமானப்பட்ட அந்த பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள், இதை எதிர்க்கும் விதத்தில் தைரியமாக, நடிகர் ஜோஜூ ஜார்ஜின் மகள், பிஜு மேனனை மிரட்டுகிறார். அவரின் தைரியம் பிலிப்பிற்கு பிடிக்காத நிலையில், ஜோஜூ ஜார்ஜின் மகளையும் கொடூரமான முறையில் பிலிப் கொலை செய்கிறார். இதற்கு பழிவாங்கும் விதத்தில், நடிகர் ஜோஜூ ஜார்ஜ் பிலிப்பை என்ன செய்தார்?, பிஜு மேனன் தனது மகனை காப்பாற்றினாரா?என்பதே இப்படத்தின் மீதி கதையாகும்.

வலது வஷத்தே கள்ளன் படத்தின் ட்ரெய்லர் குறித்த பதிவு:

வலது வஷத்தே கள்ளன் எந்த ஓடிடியில் இருகிறது:

இந்த படமானது திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படமானது அமேசன் ப்ரைம் வீடியோ ஓடிடியில் மலையாள மொழியிலும், ஆங்கில சப்டைட்டிலிலும் கிடைக்கிறது. இப்படமானது மொத்தம் 2 மணிநேரம் 16 நிமிடங்களில் உள்ளது . மலையாள க்ரைம் திரில்லர் பார்க்க விரும்புபவர்களுக்கு, இப்படம் நிச்சயம் பிடிக்கும்.

Follow Us
Related Stories
கணவருடன் பிரச்சனை… தற்கொலை செய்துகொண்ட கயல் சீரியல் நடிகை – சோகத்தில் ரசிகர்கள்
ரீமேக் படமா இருந்தாலும் சூர்யா சார் எனக்கு கார் பரிசளித்தார் – விக்னேஷ் சிவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
Vignesh Shivan: துப்பாக்கியில் விஜய் சார் சுட்டது 12 பேர்.. ஆனால் 13வது சுடப்பட்டவன் நான்- விக்னேஷ் சிவன்!
Ranbir Kapoor: ராமாயணா படத்தில் ரெட்டை வேடத்தில் ரன்பீர் கபூர்.. 2வது கதாபாத்திரம் என்ன தெரியுமா?
Suriya: சூர்யா47 படத்திற்காக மாஸ் லுக்கில் சூர்யா – ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ!
Vignesh Shivan: நான் இந்த நிலைமையில் இருக்க தனுஷ் சார்தான் காரணம்.. அவரின் நட்பை இழந்ததற்கு வெட்கப்படுகிறேன் – விக்னேஷ் சிவன் பேச்சு!
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்