அமித்தை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது இவர்தான் – கசிந்தது தகவல்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 84 நாட்களைக் கடந்துள்ளது. இந்த நிலையில் இன்று 16-வது போட்டியாளராக யார் பிக்பஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அமித்தை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது இவர்தான் - கசிந்தது தகவல்

பிக்பாஸ்

Published: 

28 Dec 2025 11:10 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 12-வது வாரம் முடிவை எட்டியுள்ளது. அதன்படி இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 84-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் வைல்கார்ட் போட்டியாளர்களுடன் இணைந்து மொத்தம் 24 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போது போட்டியாளராக கலந்துக் கொண்ட ஆதிரை மூன்றாவதாக வெளியேற்றப்பட்டார். அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் வைல்கார்ட் போட்டியாளராக வந்து மீண்டும் எவிக்டாகி வெளியே சென்றார். இந்த நிலையில் இதுவரை பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் வரை 13 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அமித் பார்கவ் 15-வது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்களே உள்ளனர்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் 84-வது நாளிற்கான வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது 10 போட்டியாளர்களே உள்ள நிலையில் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் நடைபெறுகின்றது. இதுவரை பிக்பாஸில் மூன்று முறை டபுள் எவிக்‌ஷன் நடைப்பெற்று உள்ள நிலையில் தற்போது 4-வது முறையாக டபுள் எவிக்‌ஷன் நடைபெறுகின்றது. இதில் முன்னதாக அமித் பார்கவ் வெளியேறிய நிலையில் இன்று யார் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

16-வது போட்டியாளராக வெளியேறுவது இவர்தான்:

அதன்படி பிக்பாஸி தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இன்று வீட்டை விட்டு யார் வெளியேற வேண்டும் யார் இருக்க வேண்டும் என்று சாண்ட்ரா மற்றும் கனி இருவரையும் குறித்து மற்றப் போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பப்படுகின்றது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கனி இருக்கவேண்டும், சாண்ட்ரா செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் மக்களின் முடிவு என்ன என்று விஜய் சேதுபதி காட்டுகிறார். அதில் சாண்ட்ரா இந்த வார எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். கனி வெளியேற்றப்படுவது தெரிகிறது.

Also Read… பிக்பாஸில் பார்வதியை பங்கமாக கலாய்த்த விக்ரம் அம்மா… வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவிற்காக மலேசியா புறப்பட்ட விஜய் – வைரலாகும் வீடியோ

Follow Us
Related Stories
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
ஆயிரத்தில் ஒருவன் – புதுப்பேட்டை படங்களில் வேண்டும் என்றே அதை செய்தோம்… இயக்குநர் செல்வராகவன்
கணவருடன் பிரச்சனை… தற்கொலை செய்துகொண்ட கயல் சீரியல் நடிகை – சோகத்தில் ரசிகர்கள்
ரீமேக் படமா இருந்தாலும் சூர்யா சார் எனக்கு கார் பரிசளித்தார் – விக்னேஷ் சிவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
OTT Movie: தைரியமான பெண்களை குறிவைத்து கொலை செய்யும் கொலையாளி.. விறுவிறுப்பான இந்த படத்தை பார்த்திருக்கீங்களா?
Vignesh Shivan: துப்பாக்கியில் விஜய் சார் சுட்டது 12 பேர்.. ஆனால் 13வது சுடப்பட்டவன் நான்- விக்னேஷ் சிவன்!
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்