எதிர்பாராததை எதிர்பாருங்கள்… இன்று மாலை வெளியாகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 குறித்த முக்கிய அப்டேட்
Bigg Boss Tamil Season 9: தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 9-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் 9-வது சீசன் குறித்த முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9
தமிழக மக்கள் மட்டும் இன்றி இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான தொலைக்காட்ச்சி நிகழ்ச்சி என்பது பிக்பாஸ். ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நிகழ்ச்சி கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக இந்தியாவில் இந்தி மொழியில் பிக்பாஸ் (Bigg Boss) என்ற பெயரில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. பொதுவாக இந்த சமூகத்தில் மக்களுக்கு பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். இது தொடர்பான பல கதைகளை நாம் கேட்டதுடன் பல விசங்களை நாமும் சந்தித்து இருப்போம். சமீபத்தில் கூட இணையத்தில் ஒரு பெண் பக்கத்து வீட்டில் நடக்கும் விசயத்தை ஒட்டுக்கேட்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரியான மக்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் நிகழ்ச்சியாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது.
அதன்படி 19 ஆண்டுகளுக்கு முன்பு இந்தி சினிமாவில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 9 ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த ஒவ்வொரு மொழியில் அங்கு முன்னணி நடிகராக இருப்பவர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். அதன்படி கடந்த 7 சீசன்களாக தமிழில் நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் 8-வது சீசனை தான் தொகுத்து வழங்கவில்லை என்று அறிவித்தார். அந்த இடத்திற்கு கமல் ஹாசனுக்கு இணையாக யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அதில் நடிகர் விஜய் சேதுபதி அமர்த்தப்பட்டார். ரசிகர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ன் தொடக்கம் எப்போது?
கடந்த் 8-வது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது 9-வது சீசனுக்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. முன்னதாக 9-வது சீசனுக்கான லோகோவை நிகழ்ச்சிக் குழு அறிமுகம் செய்தது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் தொடக்கம் எப்போது என்ற அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… பிரமாண்ட இயக்குநர் சங்கருக்கு இப்போ இருக்கும் இயக்குநர்கள் யாரை பிடிக்கு? அவரே சொன்ன லிஸ்ட்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
இன்னைக்கு 5 மணிக்கு
Launch date Announcement 🤩
.
.
.
.
Gear Up..😎#BiggBossSeasonTamil9 #OnnumePuriyala #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV #VijayTelevision— Vijay Television (@vijaytelevision) September 13, 2025
Also Read… நான் காதல் படங்களில் நடித்தால் அது இப்படி மட்டும் தான் இருக்கும் – நடிகர் அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்!