Bigg Boss Season 9: சமையலில் உப்பை அதிகமாக போட்ட கனி – பிரவீன்.. உச்சகட்ட கோபத்தில் ஆதிரை.. ஃபயர் ப்ரோமோ!
Bigg Boss 9 Tamil Day 5: தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 9. இதில் முதல் நாளிலிருந்தே சண்டை தொடங்கியது. இந்நிலையில், இன்று 5-வது நாளில் வெளியான ப்ரோமோ ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 9 தமிழ்
தமிழில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் தமிழில் வெளியாகிவரும் நிலையில், இந்த 2025ம் ஆண்டிற்கான பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது, கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியானது முதல் நாளிலேயே, பல பிரச்னைகளுடன் தொடங்கியிருந்தது. அந்த வகையில் மற்ற சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசனில் போட்டியாளர்கள் குறைவுதான். இந்த பிக்பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9) நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்குபெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், இன்ஸ்டாகிராம் பிரபலங்களான வாட்டர்மெலன் திவாகர், அரோரா சின்க்ளேர் (Aurora sinclair), சுபிக்ஷா, ஆதிரை (Aadhirai), கம்ருதின், கனி, பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் மற்றும் கலையரசன் உட்பட பல்வேறு போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மற்ற சீசன்களை ஒப்பிடும்போது, இந்த சீசனில் தண்ணீர் பயன்பாடு, உணவு மற்றும் பல்வேறு விதமான புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில் இன்றுடன் (10/10/2025) பிக்பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கி 5 நாட்களான நிலையில், இன்றும் ஹவுஸ்மேட்ஸ் உடனான ஆதிரையின் பிரச்சனை தொடர்ந்துவருகிறது. இது தொடர்பான வெளியான 2 ப்ரோமோ வீடியோவும் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: என்னது பிக்பாஸ் வீட்டில் போன் யூஸ் பன்றாங்களா? வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் சீசன் 9 தமிழ் 5வது நாளின் முதல் ப்ரோமோ :
#Day5 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/DBCgXVlGxn
— Vijay Television (@vijaytelevision) October 10, 2025
பிக்பாஸ் வீட்டில் தொடரும் ஆதிரையின் பிரச்சனை
பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனில் தண்ணீர் மற்றும் சாப்பாடு பற்றாக்குறையின் காரணமாக, போட்டியாளர்களுக்கிடையே பல பிரச்னைகள் எழுந்துவருகிறது. அந்த வகையில், நேற்று மற்றும் அதற்கு முன் இருந்தே ஆதிரை, பல்வேறு பிரச்னைகளை கிளப்பி வருகிறார். தண்ணீர் பிரச்னையின் காரணமாக கம்ருத்தின் உடன் பிரச்சனை தொடர்ந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் கனி மற்றும் பிரவீன் ராஜுடனான புதிய பிரச்னை ஆரம்பித்துள்ளது.
இதையும் படிங்க: தண்ணீருக்காக பிக்பாஸ் வீட்டில் சண்டையிடும் கம்ருதின் மற்றும் ஆதிரை – வைரலாகும் வீடியோ
சாப்பாட்டின் அருமையை வெளிக்கொண்டுவரும் விதத்தில், கனி மற்றும் பிரவீன் ராஜ் சமைத்த சிக்கனில் வேண்டுமென்ற உப்பை அதிகமாக போட்டிருந்தனர். இதன் காரணமாக பிரவீன் ராஜ் மற்றும் ஆதிரை இடையேயான பிரச்னையும் தொடங்கியுள்ளது. தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை வீணாகிவரும் நிலையில் உச்சகட்ட கோபத்தில் ஆதிரை இருக்கும் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
பிக்பாஸ் சீசன் 9 தமிழ் 5வது நாளின் 2வது ப்ரோமோ
#Day5 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/3MRykLoK6K
— Vijay Television (@vijaytelevision) October 10, 2025
இந்த முதல் வாரத்தின் எவிக்ஷனில், போட்டியாளர்கள் ஆதிரை, அப்சரா, வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் மற்றும் கலையரசன் போன்ற போட்டியாளர்கள் உள்ளனர். இதில் கலையரசனுக்கு மட்டும் 12 ஓட்டுகள் விழுந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வாரத்தில் எவிக்ஷனில் வியனா அல்லது பிரவீன் காந்தி வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.