பிக்பாஸில் பார்வதியால் கடுப்பான கனி – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது வாரம் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த வார தொடக்கத்திலேயே போட்டியாளர்கள் இடையே சண்டையும் தொடங்கி விட்டது.

பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Bosss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கி முதல் வாரம் முடிந்த நிலையில் ஒரே வாரத்தில் பல விசயங்கள் நடந்தது. அதன்படி இந்த முதல் வாரத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சண்டைகள் போட்டியாளர்களிடையே ஏற்பட்டது. சில சண்டைகள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டதும் பல சண்டைகள் வெளியே இருக்கும் பிரச்னைகளை தொடர்ந்து ஏற்பட்ட சண்டைகள் போல தெரிவதாக ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். 20 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சி தொடங்கிய போது உள்ளே சென்ற நிலையில் நந்தினி என்ற போட்டியாளர் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேற முடிவு செய்து வெளியேறினார். முன்பு நடந்த சீசன்களில் எல்லாம் இப்படி போட்டியாளர்கள் சொல்லும் போது அவர்களை அழைத்து பிக்பாஸ் பேசுவார். உடனே வெளியே போகலாம் என்று கூறியது இல்லை.
அதன்படி நந்தினி வெளியே செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது பிக்பாஸ் அப்படி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாகா உடனே நீங்க வெளியே செல்லலாம் என்று பிக்பாஸ் கூறியது பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த முதல் வாரத்திற்கான எவிக்ஷன் நாமினேஷனில் நாமினேட் ஆகி இருந்த பிரவீன் காந்தி குறைவான வாக்குகளைப் பெற்று இந்தப் போட்டியை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்த் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் 8 நாளிற்கான புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.
பிக்பாஸில் பார்வதியால் கடுப்பான கனி:
நேற்று விஜய் சேதுபதி வந்து பேசிமுடித்து சென்ற உடனே உள்ளே போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சாப்பாடு மதியம் சிலருக்கு கிடைக்கவில்லை என்று கிட்சன் டீமில் இருப்பவர்கள் அளவாக பகிர்ந்து சாப்பிட ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த பார்வதி அவருக்கு அவரே எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டார்.
இதனால் வீட்டில் பிரச்னை வெடித்தது. அதனைத் தொடர்ந்து இன்று வெளியான புரோமோ வீடியோவில் கிட்சனில் அமர்ந்துகொண்டு கனியை வெறுப்பேற்றும் விதமாக பார்வதி பேசி வருகிறார். இதனால் அங்கு சண்டை நிகழ்வது அந்த வீடியோவைப் பார்க்கும் போது தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
Also Read… பராசக்தி படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? இணையத்தில் வைரலகும் வீடியோ!
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட வீடியோ:
Also Read… பைசன் படத்தை தொடர்ந்து அடுத்தது அந்த நடிகரின் படம் தான் – மாரி செல்வராஜ் ஓபன் டாக்