பிக்பாஸில் இந்த வார வீட்டு தல டாஸ்க் இதுவா? வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி முதல் வாரத்தில் வீட்டின் தலயாக துஷார் வெற்றிப்பெற்றார். இவரின் பதவி குறித்து போட்டியாளர்களிடையே பல கருத்துகள் நிலவிய நிலையில் இந்த வாரத்திற்கான போட்டி தொடங்கியுள்ளது.

பிக்பாஸில் இந்த வார வீட்டு தல டாஸ்க் இதுவா? வைரலாகும் வீடியோ

பிக்பாஸ்

Published: 

14 Oct 2025 11:08 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதில் இயக்குநர் பிரவீன் காந்தி நாமினேஷனில் மக்களிடையே குறைவான வாக்குகளைப் பெற்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். முன்னதாக பிக்பாஸ் போட்டியாளர் நந்தினி தானாகவே வீட்டை விட்டு வெளியேறினார். இதன் காரணமாகவே தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில்  ஒவ்வொரு சீசனிலும் வீட்டில் கேப்படனாக இருக்க வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்கள் என 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூவருக்கும் பிக்பாஸ் ஒரு போட்டியை நடத்துவார். அந்தப் போட்டியில் வெற்றிப் பெறுபவர்கள்தான் வீட்டின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக உள்ளவர்கள் நாமினேஷனில் இருந்து விலக்கு கிடைக்கும் என்பதாலேயே இந்தப் போட்டியில் வெற்றிப் பெற போட்டியாளர்கள் முனைப்பு காட்டுவார்கள். மேலும் எத்தனை முறை பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஆகிறார்களோ அத்தனை முறையும் அவர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்பது விதி. இப்படி இத்தனை சீசன்களாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த 9-வது சீசனில் வேறு விதமாக மாற்றப்பட்டுள்ளது. அதில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதில் ஒவ்வொருவராக வெளியேறி பின்பு இறுதியில் தேர்ந்தெடுத்த போட்டியாளர் வீட்டின் தல பதவிக்கு தேர்வாகிறார்கள்.அதன்படி கடந்த வாரம் துஷார் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் தலயாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வார வீட்டு தல டாஸ்க் என்ன தெரியுமா?

அதன்படி இந்த வாரம் வீட்டு தல டாஸ்க் போட்டி குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில் வீட்டில் உள்ள மொத்த 18 போட்டியாளர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிரில் மொத்தம் 17 பெட்டிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளது. இதில் யாருடைய புகைப்படத்தை வைக்க முடியாமல் போனால் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியால் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… சூர்யா சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் – மமிதா பைஜூ

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகை பூஜா ஹெக்டே பிறந்த நாள் – சிறப்பு போஸ்டரை வெளியிட்ட DQ41 படக்குழு