அமித் – FJ-க்கும் இடையே வெடிக்கும் பிரச்னை.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்டே பிரஜின்.. வைரலாகும் ப்ரோமோ!

BB Tamil 9 Day 33 Promo: கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தமிழில், தொடங்கிய ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 33 நாட்களான நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் வைல்ட் கார்ட் போட்டியாளார்களுடன் தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் சண்டையிடுவது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அமித் - FJ-க்கும் இடையே வெடிக்கும் பிரச்னை.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்டே பிரஜின்.. வைரலாகும் ப்ரோமோ!

பிக் பாஸ் 33வது நாள் ப்ரோமோ

Updated On: 

07 Nov 2025 16:09 PM

 IST

விஜய் டிவியில் ஆண்டுதோறும் வெளியாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ் தமிழ் (Bigg Boss Tamil). இதுவரை சுமார் 8 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், இந்த 2025 ஆம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9 Tamil) தமிழ் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2025 அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமான நிலையில் இதுவரை மொத்தமாக 33 நாட்கள் ஆகியுள்ளது. இந்த 33 நாட்களில் 5 போட்டியாளர்கள் எவிக்ட் ஆகியுள்ள நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளார்களுடன் (Wildcard contestants) மொத்தம் 19 நபர்கள் போட்டியாளர்களாக உள்ளே இருக்கிறார்கள். வைல்ட் கார்ட் எண்டரி நுழைவதற்கு முன் இந்த நிகழ்ச்சியில் தொடந்து, பல்வேறு விஷயங்கள் நடந்திருந்தது. அதை தொடர்ந்து கடந்த 2025 நவம்பர் 2 ஆம் தேதி வைல்ட் கார்ட் எண்டரியாக 4 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்திருந்தனர்.

இவர்கள் உள்ளே நுழைந்ததில் இருந்து மேலும் ஆட்டம் சூடுபிடிபிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் வைல்ட் கார்ட் எண்டரி போட்டியார்களிடையே பிரச்னைகள் நிலவி வருகிறது. இது தொடர்பான 33வது நாளான இன்று வெளியான ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: யார் உங்களுக்கானவர்? ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்ஃபிரண்ட் பட விமர்சனங்கள் இதோ!

33வது நாளில் பிக் பாஸ் சீசன் 9 முதல் ப்ரோமோ வீடியோ பதிவு :

இந்த முதல் ப்ரோமோவில் அமித் மற்றும் FJ இருவரிடையேவியும் பிரச்னை வெடிக்கிறது. சமீபத்தில் நடந்த ஆஹா ஹோட்டல் டாஸ்கின் போது, சிறப்பு விருந்தினர்களிடையே அமித் நடந்துக்கிட்டது குறித்து FJ கோபமுடன் பேசியுள்ளார். இதில் அமித் மற்றும் FJ இடையே வாய் தகராறு வெடிக்கிறது. இவர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது போல இந்த ப்ரோமோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் யாரும் கண்டுகொள்ளாதது போல இருப்பதும் இதில் கட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன்.. எனது பேட்டிகளை தவறாக சித்தரிப்பாதை நிறுத்துங்கள்- அஜித் குமார்!

33வது நாளில் பிக் பாஸ் சீசன் 9 2வது ப்ரோமோ வீடியோ பதிவு :

இந்த 2வது ப்ரோமோவில் பார்வதி, பிரஜினை பற்றி கருத்தை முன் எடுத்துவைக்கிறார். பார்வதி, பிரஜினின் தோள்மீது கைவைத்த நிலையில் அவர் பார்வதியின் கையை வேகமாக தட்டிவிட்டதாக ஒரு புகாரை முன்வைக்கிறார். இதற்கு பிரஜினும் தனது வாதத்தை முன்வைக்கிறார். இதன் காரணமாக பார்வதி அழுவது போன்ற காட்சிகள் இந்த 2வது ப்ரோமொஷவில் உள்ளது. தொடர்ந்து அனைத்து வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் பார்வதியை அடிக்கும் நிலையில், சுவாரஸ்ய திருப்பங்களுடன் இன்றய பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.